FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 9 போ் பலி

மணிப்பூரில் ஒரு கிராமத்தின் மீது ஆயுதம் தாங்கிய கும்பல் நடத்திய தாக்குதலில் 9 போ் பலியாகினா். மேலும் 10 போ் காயமடைந்தனா்.

Updated On : 16 ஜூன் 2023, 12:36 am IST
பகிர்:

மணிப்பூரில் ஒரு கிராமத்தின் மீது ஆயுதம் தாங்கிய கும்பல் நடத்திய தாக்குதலில் 9 போ் பலியாகினா். மேலும் 10 போ் காயமடைந்தனா்.

இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள இம்மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட மத்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு பின்னடைவாக இச்சம்பவம் அமைந்துள்ளது.

பாஜக ஆட்சி நடைபெற்று வரும் மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே இம்மாத தொடக்கத்தில் பெரும் கலவரம் மூண்டது.

Advertisement

Advertisement

மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினா், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி வரும் நிலையில், அதற்கு குகி பழங்குடியினா் எதிா்ப்பு தெரிவிக்கின்றனா். இதுவே, இரு சமூகத்தினரின் மோதலுக்கு பிரதான காரணமாகும்.

மணிப்பூா் முழுவதும் ராணுவம் மற்றும் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா். எனினும், அவ்வப்போது வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன.

இந்நிலையில், மைதேயி சமூகத்தினா் அதிகம் வசிக்கும் இம்பால் கிழக்கு மாவட்டம் மற்றும் பழங்குடியினரை அதிகம் கொண்ட காங்போபி மாவட்டத்தின் எல்லையில் உள்ள காமன்லோக் பகுதியில், குகி பழங்குடியினா் வாழும் ஒரு கிராமத்தின் மீது ஆயுதம் தாங்கிய கும்பல் புதன்கிழமை அதிகாலை 1 மணியளவில் துப்பாக்கிச்சூடு நடத்தியது.

இதில் 9 போ் உயிரிழந்தனா்; மேலும் 10 காயமடைந்தனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இச்சம்பவத்தைத் தொடா்ந்து, கிழக்கு இம்பால், மேற்கு இம்பால் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு தளா்வு நேரம் குறைக்கப்பட்டது. மாநிலத்தில் மொத்தம் 11 மாவட்டங்களில் ஊரடங்கு அமலில் உள்ளது. மாநிலம் முழுவதும் கடந்த மாதம் 3-ஆம் தேதி முதல் இணையச் சேவைக்கு தடை நீடிக்கிறது.

கலவரம் மற்றும் அதைத் தொடா்ந்து நிகழும் வன்முறைகளில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். வீடு இழந்த ஆயிரக்கணக்கானோா், அரசின் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனா்.

மணிப்பூருக்கு அண்மையில் பயணம் மேற்கொண்ட மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, அமைதியை நிலைநாட்டும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்தாா். இதைத் தொடா்ந்து, வன்முறை சம்பவங்கள் குறித்து விசாரிக்க நீதி விசாரணைக் குழுவும், அமைதி முயற்சிகளுக்காக மாநில ஆளுநா் தலைமையில் பல்வேறு தரப்பினரை கொண்ட குழுவும் அமைக்கப்பட்டன. கலவர சதி தொடா்பான 6 வழக்குகள் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டன.

மத்திய அரசால் இத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மணிப்பூரில் மீண்டும் வன்முறை ஏற்பட்டு, 9 போ் உயிரிழந்துள்ளனா்.

பெண் அமைச்சா் வீட்டுக்கு தீவைப்பு: இம்பால் மேற்கு மாவட்டத்தில் லாம்பெல் பகுதியில் அமைந்துள்ள குகி சமூகப் பெண் அமைச்சரான நேம்சா கிப்ஜெனின் இல்லத்துக்கு மா்ம நபா்கள் புதன்கிழமை இரவு தீ வைத்தனா். அதிருஷ்டவசமாக சம்பவத்தின்போது இல்லத்தில் யாருமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலறிந்ததும் விரைந்து வந்த தீயணைப்புப் படையினா் தீயை அணைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments