FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வெள்ளிமணி

அம்மனின் ஆடித்தபசு

உலக உயிர்களுக்கும் ஒரு தத்துவ விளக்கம்தர திருவுளம் கொண்டார் சிவபெருமான்.

Updated On : 17 ஜூலை 2026, 4:44 pm IST
பகிர்:

பல்லுயிரும் படைத்த பராசக்திக்கு சந்தேகம் வருமா...?, வந்ததே!

"உலகில் பெரியவர் யார்? தனக்கு இடப்

பாகம் அளித்த உமையொருபாகனா?

Advertisement

Advertisement

அல்லது பாசமிகு அண்ணன் திருமாலா?'

இதுதான் பார்வதி தேவிக்கு உதித்த சந்தேகம். சந்தேகம் தீர்க்க ஈசனையே நாடினாள் அன்னை. உமையவளின் சந்தேகத்துக்கு மட்டுமல்ல; உலக உயிர்களுக்கும் ஒரு தத்துவ விளக்கம்தர திருவுளம் கொண்டார் சிவபெருமான்.

அவர் பார்வதி தேவியிடம், ""அகத்திய முனிவர் இருக்கும் பொதிகை மலை பக்கத்தில் புன்னை விருட்ச வடிவமாக அநேகர் தவம் செய்கின்றனர். அங்கே சென்று நீயும் தவம் செய்வாயானால், உனது சந்தேகம் தீரும்'' என்றார்.

அதன்படியே அம்மையும் தற்போது சங்கரன் கோவில் அமைந்துள்ள புன்னை வனப்பகுதிக்கு வந்து தவக்கோலத்தில் எழுந்தருளினாள்.

காலங்கள் உருண்டோட, ஒரு ஆடி மாத உத்திராடம் நட்சத்திரத்தன்று சிவன் பாதி விஷ்ணு பாதியாக திருவுருக்கொண்டு சங்கரநாராயணராய் காட்சி தந்தார் இறைவன்.

சிவன் வேறு... திருமால் வேறு அல்ல. இருவருமே ஒருவர்தான் என்பதை உணர்த்தும் தத்துவ கோலத்தைக் கண்டு தன் சந்தேகம் தெளிந்தாள் தேவி.

இப்படி அன்னை கண்ட அரிய திருக்காட்சியை நாமெல்லாம் கண்டு தரிசிக்கும் நன்னாள்தான் வருடம்தோறும் கொண்டாடப்படும் ஆடித்தபசு திருநாள்.

சங்கரன்கோவிலில் ஜூலை 28}ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) ஆடித்தபசு திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்பட இருக்கிறது.

- ஆர்.ஜெயலெட்சுமி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments