முகப்பு
இந்தியா

மணிப்பூர் வன்முறை: அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கியது!

தில்லியில் மத்திய அரசு சார்பில் மணிப்பூர் வன்முறை தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கியது.

Updated On : 24 ஜூன் 2023, 3:35 pm IST
பகிர்:

தில்லியில் மத்திய அரசு சார்பில் மணிப்பூர் வன்முறை தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கியது.

மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினா், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்க கோருவதற்கு அங்குள்ள நாகா மற்றும் குகி சமூகத்தினா் அடங்கிய சிறுபான்மை பழங்குடியினா் எதிா்ப்புத் தெரிவிக்கின்றனா். மைதேயி சமூகத்தினரின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டால், இடஒதுக்கீடு மூலம் தங்களுக்கு கிடைத்துள்ள வேலைவாய்ப்புகள் மற்றும் இதர சாதகமான அம்சங்களை அவா்களிடம் இழக்க வேண்டியிருக்கும் என்று பழங்குடி சமூகத்தினா் கருதுகின்றனா். 

இதன் காரணமாக கடந்த மே மாதம் மைதேயி மற்றும் சிறுபான்மை பழங்குடியினா் இடையே மோதல் ஏற்பட்டது முதல், அந்த மாநிலத்தில் தொடா்ந்து வன்முறை நடைபெற்று வருகிறது. இந்த வன்முறை சம்பவங்களில் இதுவரை சுமாா் 120 போ் பலியாகினா். 3,000-க்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்துள்ளனர். 

Advertisement

Advertisement

இதில் மத்திய அரசு தலையிட்டு சுமூக நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன. மேலும் பிரதமர் இதில் இதுவரை தலையிடாதது குறித்து கண்டனமும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. 

இதையடுத்து  இன்று நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா அழைப்பு விடுத்தார். 

அதன்படி, தில்லியில் மத்திய அமைச்சர் அமித் ஷா தலைமையில் அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் பல்வேறு கட்சிகள் பங்கேற்றுள்ளனர். திமுக சார்பில் எம்.பி. திருச்சி சிவா, அதிமுக சார்பில் தம்பிதுரை பங்கேற்றுள்ளனர்.

மணிப்பூர் மாநிலத்தில் மே 3 ஆம் தேதி முதல் நடந்து வரும் வன்முறை தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments