அசாமில் மிதமான நிலநடுக்கம்!
அசாமில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய நிலநடுக்க மையம் தெரிவித்துள்ளது.
அசாமில் 3.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அசாம் மாநிலத்தின் கம்ரூப் மாவட்டத்தில் புதன்கிழமை அதிகாலையில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் வெளியாகவில்லை.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.2 ஆகப் பதிவாகியுள்ளது. இன்று அதிகாலை 3:59 மணிக்கு கம்ரூப் மாவட்டத்தில் 10 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: கூத்தாநல்லூர்: நகராட்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு
பிப்ரவரி 28 அன்று, குஜராத்தின் ராஜ்கோட் மாவட்டத்தில் 4.3 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. மதியம் 3:21 மணியளவில் 10 கிமீ ஆழத்தில் இந்த நடுக்கம் உணரப்பட்டதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் உறுதிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.