முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் சாலை விபத்து: இருவர் பலி

மகாராஷ்டிர மாநிலம் நாசிக் நகரில் சரக்கு வாகனம் மோதியதில் லாரி ஓட்டுநரின் மனைவி மற்றும் அவருடைய 5 வயது மகள் உயிரிழந்தனர்.

Updated On : 23 மே 2023, 7:14 pm IST
கோப்புப் படம்
பகிர்:

நாசிக்: மகாராஷ்டிர மாநிலம் நாசிக் நகரில் சரக்கு வாகனம் மோதியதில் லாரி ஓட்டுநரின் மனைவி மற்றும் அவருடைய 5 வயது மகள் உயிரிழந்தனர். அதே வேழையில் மற்றொரு வாகனமான கன்டெய்னர் லாரியின் ஓட்டுநர் காயமடைந்தார்.

இது குறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:

இகத்புரியிலிருந்து துலேவுக்கு டிரைவர் அப்சல் ரோஷன் அலி ஷேக், அவரது மனைவி மற்றும் அவர்களின் மூன்று மகள்கள் உள்பட ஐந்து பேருடன் ஒரு லாரி சென்று கொண்டிருந்தனர். மும்பை-ஆக்ரா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கண்ணம்வார் பாலம் அருகே ஷேக் வாகனத்தை நிறுத்தி, தான் ஏற்றிச் சென்ற சரக்குகளை பாதுகாக்கும் கயிறுகளை சரி செய்துள்ளார்.

Advertisement

Advertisement

அப்போது ஷேக்கின் வாகனம் மீது கன்டெய்னர் லாரி ஒன்று மோதியதில், அவரது மனைவி மற்றும் 5 வயது மகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் ஷேக், அவரது 7 மற்றும் 1 வயதுடைய மகள்கள் மற்றும் கன்டெய்னர் லாரியின் ஓட்டுநர் ஆகியோர் காயமடைந்தனர். சிகிச்சைக்காக அவர்கள் மாவட்ட சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்து பஞ்சவடி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments