முகப்பு
இந்தியா

பாஜக வீழ்ச்சியின் விளைவாகவே அமலாக்கத்துறை சோதனைகள் நடத்தப்படுகின்றன: ஜெய்ராம் ரமேஷ்

பாஜக செல்வாக்கை இழந்து வருவதன் காரணமாகவே அமலாக்கத் துறை சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன என்று ஜெய்ராம் ரமேஷ் குற்றம் சாட்டினார்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:16 AM
ஜெய்ராம் ரமேஷ் (கோப்புப் படம்)
பகிர்:

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் பாஜக வீழ்ச்சி அடைந்து வருவதன் விளைவாகவே அமலாக்கத்துறை சோதனைகள் அதிகரித்துள்ளன என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.

நவம்பர் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் சத்தீஸ்கரில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. அம்மாநில முதல்வா் பூபேஷ் பகேலுக்கு மகாதேவ் சூதாட்டச் செயலி உரிமையாளா்களிடம் இருந்து ரூ.508 கோடி கைமாறியிருப்பதாக கூறியுள்ள அமலாக்கத் துறை, இது தொடா்பாக விசாரணையை தொடங்கியுள்ளது. 

அதேபோல, நவம்பர் 25-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள ராஜஸ்தான் மாநிலத்திலும் அம்மாநில முதல்வர் அசோக் கெலாட்டின் மகன் வைபவ் கெலாட்டிற்கு எதிராக அமலாக்கத்துறை விசாரணையை துவக்கியுள்ளது. 

மேலும், ஜெய்ப்பூரில் உள்ள ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றது.  

இவற்றை குறிப்பிட்டு பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், “சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பாஜக செல்வாக்கை இழந்து வருவது வெளிப்படையாக தெரிகிறது. அங்கு பாஜக வீழ்ச்சி அடைந்து வருவதன் விளைவாகவே இந்த மாநிலங்களில் விசாரணை அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்தி வருகிறது. இந்த சோதனைகள் அனைத்தும் பாஜகவின் பழிவாங்கும் அரசியலே ஆகும். இவை அனைத்தையும் தாண்டி இந்த இரு மாநிலங்களிலும் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்.” என்று கூறினார். 

முழு கட்டுரையைப் படிக்க →