இந்தியா

ஹரியாணா மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் பாஜகவில் இணைந்தார்!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அசோக் தன்வார் மற்றும் முன்னாள் அமைச்சர் ராம்கோபால் பைர்வா ஆகியோர் பாஜகவில் இணைந்தனர்.

DIN

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் இணைந்துள்ளனர்.

ராஜஸ்தான் முன்னாள் அமைச்சர் ராம் கோபால் மற்றும் முன்னாள் ஹரியாணா மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் தன்வார் ஆகிய இருவரும் இன்று (நவம்.11) பாஜகவில் இணைந்தனர். 

ஜெய்ப்பூரில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் ராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் சி.பி.ஜோஷி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் ஆகியோர் முன்னிலையில் கட்சியில் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.

அவர்களை வரவேற்றுப் பேசிய சி.பி.ஜோஷி, “பிரதமர் மோடியின் தலைமையை ஏற்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நாங்கள் காங்கிரஸ் இல்லாத பாரதத்தை உருவாகி வருகிறோம்” என்று தெரிவித்தார். 

2019-ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய அசோக் தன்வார் 2021 பிப்ரவரியில் அப்னா பாரத் மோர்ச்சா என்ற கட்சியைத் தொடங்கினார். அதன்பின் 2021 நவம்பரில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

200 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு நவம்பர் 25-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. டிசம்பர் 3-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

தேனி, வீரபாண்டியில் நாளை மின் தடை

பழனி அருகே காா் கவிழ்ந்து பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT