காங்கிரஸ் எம்.பி.க்களுடன் சோனியா காந்தி நாளை(செப். 5) ஆலோசனை
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரையொட்டி காங்கிரஸ் எம்.பி.க்களுடன் காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி நாளை(செவ்வாய்கிழமை) ஆலோசனை மேற்கொள்கிறார்.
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரையொட்டி காங்கிரஸ் எம்.பி.க்களுடன் காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி நாளை(செவ்வாய்கிழமை) ஆலோசனை மேற்கொள்கிறார்.
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் செப்டம்பர் 18 முதல் 22 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சில முக்கிய மசோதாக்களை நிறைவேற்றும்பொருட்டு மத்திய அரசு இந்த சிறப்புக் கூட்டத்தொடரை அறிவித்திருக்கலாம் என்று எதிர்க்கட்சிகள் கருதுகின்றன.
இந்நிலையில், சிறப்புக் கூட்டத்தொடர் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி.க்களுடன் காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி நாளை(செவ்வாய்கிழமை) ஆலோசனை மேற்கொள்கிறார்.
சிறப்புக் கூட்டத்தொடரில் எழுப்ப வேண்டிய மக்களின் பிரச்னைகள் என்ன? மத்திய அரசு முக்கிய மசோதாக்களை கொண்டுவந்தால் எப்படி எதிர்கொள்வது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொள்ளவிருப்பதாகத் தெரிகிறது.
இந்தியா கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்களின் கூட்டமும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நாளை(செப். 5) நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.