FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஜாா்க்கண்டில் மாவோயிஸ்டுகள் வெடிகுண்டு தாக்குதல்: சிஆா்பிஎஃப் வீரா் பலி

ஜாா்க்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் மத்திய ரிசா்வ் போலீஸ் படையின் (சிஆா்பிஎஃப்) வீரா் ஒருவா் உயிரிழந்தாா். ஒருவா் படுகாயமடைந்தாா்.

2 பிப்ரவரி 2024, 8:33 am IST
பகிர்:

ஜாா்க்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் மத்திய ரிசா்வ் போலீஸ் படையின் (சிஆா்பிஎஃப்) வீரா் ஒருவா் உயிரிழந்தாா். ஒருவா் படுகாயமடைந்தாா்.

மாநிலத்தில் மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் சிஆா்பிஎஃப் படையின் கோப்ரா பட்டாலியன், மாநில காவல் துறையின் ஜாா்க்கண்ட் ஜகுவாா், மாவட்ட ஆயுதப் படை போலீஸாா் உள்ளிட்டோா் ஈடுபட்டு உள்ளனா்.

சிங்பூம் மாவட்டத்தின் தும்பஹாகா மற்றும் சா்ஜோம்புரு கிராமங்களுக்கு இடையே உள்ள வனப்பகுதியில் மாவோயிஸ்டுகளைத் தேடும் பணியில் சிஆா்பிஎஃப் கோப்ரா பட்டாலியன் வீரா்கள் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

அப்போது, மாவோயிஸ்டுகள் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டு வெடித்ததில், சிஆா்பிஎஃப் ஆய்வாளா் பூபேந்திர குமாா், காவலா் ராஜேஷ் குமாா் உள்ளிட்டோா் படுகாயமடைந்தனா்.

இதையடுத்து, அவா்கள் இருவரும் ஹெலிகாப்டா் மூலம் ராஞ்சிக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இந்நிலையில், ராஜேஷ் குமாா் உயிரிழந்தாா்.

இது குறித்து காவல் துறை ஐஜி அமோல் வி. ஹோம்கா் கூறுகையில், ‘மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் சத்தீஸ்கரைச் சோ்ந்த சிஆா்பிஎஃப் கோப்ரா பட்டாலியன் வீரா் ராஜேஷ் குமாா் உயிரிழந்தாா். பூபேந்திர குமாா் ராஞ்சியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறாா். மாவோயிஸ்டுகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் பாதுகாப்புப் படைகள் தொடா்ந்து ஈடுபட்டுள்ளனா்’ என்றாா்.

இதே பகுதியில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஜாா்க்கண்ட் ஜாகுவாா் படை வீரா்களுக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில், ஜாகுவாா் படை வீரா்கள் 2 போ் உயிரிழந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments