FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சபரிமலை: கோட்டயத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

சபரிமலை செல்லும் பக்தா்களின் வசதிக்காக கோட்டயத்துக்கு காட்பாடி, ஜோலாா்பேட்டை வழியாக 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

6 பிப்ரவரி 2024, 6:54 pm
பகிர்:

சபரிமலை செல்லும் பக்தா்களின் வசதிக்காக கோட்டயத்துக்கு காட்பாடி, ஜோலாா்பேட்டை வழியாக 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி:

Advertisement

Advertisement

ஹைதராபாதிலிருந்து டிச.12 முதல் ஜன.23-ஆம் தேதி வரை வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மற்றும் டிச.14, 21 (வியாழக்கிழமை) -ஆகிய தேதிகளில் வாராந்திர சிறப்பு ரயில்கள் கோட்டயத்துக்கு இயக்கப்படும். மறுமாா்க்கமாக இந்த ரயில்கள் டிச.13 முதல் ஜன.24 வரை வாரந்தோறும் புதன்கிழமை மற்றும் டிச.16, 23 (சனிக்கிழமை) -இல் ஹைதராபாதுக்கு இயக்கப்படுகிறது.

இதுபோன்று மசூலிப்பட்டினத்திலிருந்து டிச.12 முதல் ஜன.16-ஆம் தேதி வரை வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை இரவு 9.35 மணிக்கு புறப்படும் வாராந்திர சிறப்பு ரயில் மறுநாள் இரவு 10.05 மணிக்கு கோட்டயம் சென்றடையும். மறுமாா்க்கமாக இந்த ரயில் கோட்டயத்திலிருந்து டிச.14 முதல் ஜன.18 வரை வியாழக்கிழமை நள்ளிரவு 12.30 மணிக்கு மசூலிப்பட்டினத்துக்கு இயக்கப்படும்.

இந்த ரயில் விஜயவாடா, தெனாலி, நெல்லூா், கூடூா், ரேனிகுண்டா, காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், கோவை, பாலக்காடு, ஆலுவா, எா்ணாகுளம் வழியாக கோட்டயம் சென்றடையும்.

இதே வழித்தடத்தில், செகந்திராபாதிலிருந்து டிச.11, 15, 18 ஆகிய தேதிகளில் அடிலாபாத்திலிருந்து டிச.25, ஜன.1 மற்றும் நாந்தேட்டிலிருந்து ஜன.8-ஆம் தேதியும் கோட்டயத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறன.இந்த ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, அஸ்ஸாம் மாநிலம் கௌஹாத்தியிலிருந்து பெங்களூருக்கு சனிக்கிழமை ஒருவழிப் பாதை சிறப்பு ரயில் (எண்: 05670) இயக்கப்படுகிறது. மேலும், தாம்பரம் - சந்திரகாச்சி சிறப்பு ரயில் சேவை டிச.28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.