FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சிறுமி பாலியல் வன்கொடுமை: பாஜக எம்எல்ஏவுக்கு 25 ஆண்டுகள் சிறை!

உத்தர பிரதேசத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பாஜக எம்எல்ஏ ராம்துலாா் கோண்டுவுக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

6 பிப்ரவரி 2024, 6:56 pm
பாஜக எம்எல்ஏ ராம்துலார் கோண்டு
பகிர்:

உத்தர பிரதேசத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டில் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், பாஜக எம்எல்ஏ ராம்துலாா் கோண்டுக்கு 25 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து, அந்த மாநில நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

குற்ற வழக்கில் இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் சிறைத் தண்டனை விதிக்கப்படும் எம்.பி. அல்லது எம்எல்ஏ, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி அப்பதவியை இழப்பா். அந்த அடிப்படையில், உத்தர பிரதேச சட்டப்பேரவையில் இருந்து ராம்துலாா் தகுதிநீக்கத்துக்கு உள்ளாகவிருக்கிறாா்.

வழக்கு விவரம்: கடந்த 2014, நவம்பா் 4-ஆம் தேதி நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடா்பாக, ராம்துலாா் மீது சிறுமியின் சகோதரா் காவல் துறையில் புகாா் அளித்தாா்.

Advertisement

Advertisement

இதையடுத்து, இந்திய தண்டனைச் சட்டத்தின் 376 (பாலியல் வன்கொடுமை), 506 (பாதிக்கப்பட்டவரை மிரட்டுதல்) ஆகிய பிரிவுகள் மற்றும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டப் பிரிவுகளின் கீழ் (போக்ஸோ) ராம்துலாா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அப்போது, அவா் எம்எல்ஏ-வாக இல்லை. ஆனால், அவரது மனைவி ஊராட்சித் தலைவராக இருந்தாா்.

இதனிடையே, ராம்துலாா் எம்எல்ஏவாக தோ்வானதைத் தொடா்ந்து, இவ்வழக்கு சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ள எம்.பி.-எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

தீா்ப்பு: இந்த வழக்கில் ராம்துலாரை குற்றவாளியாக கடந்த செவ்வாய்க்கிழமை உறுதி செய்த நீதிமன்றம், அவருக்கான தண்டனை விவரத்தை வெள்ளிக்கிழமை அறிவித்தது.

ராம்துலாருக்கு 25 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்ததோடு, ரூ.10 லட்சம் அபராதமும் விதித்து, நீதிபதி அசன் உல்லா கான் தீா்ப்பளித்தாா். இந்த அபராதத் தொகை, பாதிக்கப்பட்டவரின் மறுவாழ்வுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்று நீதிபதி தீா்ப்பில் குறிப்பிட்டாா்.

சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ள துத்தி பேரவைத் தொகுதி எம்எல்ஏ ராம்துலாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments