FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஆசிரியர் நியமன முறைகேடு வழக்கு: நீதிபதியின் கணவருக்கு சிஐடி அழுத்தமா?

நீதிபதி அம்ரிதா சின்காவுக்கு எதிராக வாக்குமூலம் அளிக்கும்படி சிஐடி அழுத்தம் கொடுப்பதாக மூத்த வழக்குரைஞர் பிரதாப் சந்திர தேய் புகார் அளித்துள்ளார்.

6 பிப்ரவரி 2024, 6:59 pm
கோப்புப் படம்
பகிர்:

கொல்கத்தா: கொல்கத்தா நீதிமன்ற நீதிபதி அம்ரிதா சின்காவுக்கு எதிராக வாக்குமூலம் அளிக்கும்படி சிஐடி அழுத்தம் கொடுப்பதாக அதே நீதிமன்றத்தில் மூத்த வழக்குரைஞராக இருக்கும் பிரதாப் சந்திர தேய் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில், மாநில காவல்துறையின் சிஐடி பிரிவினர், தனது மனைவி மற்றும் கொல்கத்தா நீதிமன்ற நீதிபதி அம்ரிதா சின்காவுக்கு எதிராக வாக்குமூலம் அளிக்கும்படி தனக்கு அழுத்தம் கொடுப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

கொல்கத்தா பெருமாநகர நீதிமன்றத்தின் வழக்குரைஞர்கள் சங்கத்தில் அளித்திருக்கும் அந்த புகாரில் அவர் மேலும் கூறியிருப்பதாவது, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தன்னை ஒரு வழக்கில் சாட்சியாக வரவழைத்ததாகவும், அதன்பிறகு தனது மனைவிக்கு எதிராக வாக்குமூலம் அளிக்குமாறு அழுத்தம் கொடுத்ததாகவும் தேய் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

மேற்கு வங்க அரசுப் பள்ளி ஆசிரியர் நியமனத்தில் நடந்த மோசடி குறித்த வழக்கு நீதிபதி அம்ரிதா சின்ஹா அமர்வில் நிலுவையில் உள்ளது. ஆசிரியர் நியமன முறைகேட்டு வழக்கில், சிபிஐ நடத்திய விசாரணையின் போது வெளிவந்த பெருநிறுவனங்களின் இயக்குநர்களின் சொத்துகள் மற்றும் ஆவணங்கள் தொடர்பான வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு வருகிறது.

இந்த நிலையில், தேய் அளித்திருக்கும் புகாரில், தனக்கு குற்றப் புலனாய்வு அமைப்பினர்,  இரண்டு முறை சம்மன் அனுப்பியதாகவும், ஒரு முறை, சிஐடி அலுவலகத்தில் சுமார் 9 மணி நேரம் காக்கவைக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது செல்போனை ஒப்படைக்குமாறு அதிகாரிகள் கொடுத்த உத்தரவை தான் மதிக்கவில்லை என்றும், அதற்கு பதிலாக பதில் கடிதம் அளித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தனது மனைவிக்கு எதிராக வாக்குமூலம் அளிக்குமாறு தன்னை வற்புறுத்துவது மட்டுமின்றி, ஆதாயம் தரும் வாக்குறுதிகள் மூலம் தன்னைக் கவர்ந்து இழுக்க சிஐடி தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தேய் தனது புகாரில் கூறியதாக வழக்கறிஞர் சங்க வட்டாரங்கள் தெரிவித்தன.

இது குறித்து சிஐடி அதிகாரிகள் அளித்த விளக்கத்தில், தேய்குக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரிக்கப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் தங்கள் புலன்கள் விசாரித்து வருவதாகக் கூறியுள்ளனர். ஏற்கனவே வகுக்கப்பட்ட நடைமுறைகளின்படி மட்டுமே தேயிடம் விசாரிக்கப்பட்டு வருவதாகவும், அதே வேளையில், தேய்  விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

சிஐடி காவலர்களால் இரண்டு முறை சம்மன் அனுப்பப்பட்டதாகவும், கடைசி நேரத்தில் சிஐடி அலுவலகத்தில் ஒன்பது மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்ததாகவும், டேய் தனது மொபைல் போனை சமர்ப்பிக்குமாறு சிஐடியின் உத்தரவை மதிக்கவில்லை என்றும் அதற்கு பதிலாக கவுன்டர் கொடுத்ததாகவும் டேய் கூறினார். அரசு நிறுவனத்திற்கு கடிதம்.

இது குறித்து, நீதிமன்றத்தில் உள்ள வழக்குரைஞர்களுக்கான சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் அரசில் தொழில்துறை அமைச்சராக இருந்த  பார்த்த சாட்டர்ஜி, 2014 - 2021ஆம் ஆண்டு வரை கல்வி அமைச்சராக இருந்தபோது, ஆசிரியர் பணி நியமனம் தொடர்பாக முறைகேட்டில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார்.

அவரது உதவியாளரும், நடிகையுமான அர்பிதா முகர்ஜியும் கைது செய்யப்பட்டு அமலாக்கத் துறை காவலில் வைத்து விசாரணை நடத்தினர்.

கொல்கத்தாவில் உள்ள பார்த்தா சாட்டர்ஜியின் வீட்டில் அமலாக்கத் துறையினர் நடத்திய சோதனையில் பல கோடி ரூபாய் பணம், தங்க நகைகள், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த வழக்கு கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.