FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

6 மாதங்களில் ரூ. 1.32 லட்சம் கோடி லாபம் ஈட்டியுள்ள எண்ணெய் நிறுவனங்கள்: பிரியங்கா குற்றச்சாட்டு

‘சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்தும் நாட்டில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாததால், எண்ணெய் நிறுவனங்கள் கடந்த 6 மாதங்களில் ரூ. 1.32 லட்சம் கோடி லாபம் ஈட்டியுள்ளன’ என்று

6 பிப்ரவரி 2024, 7:04 pm
பிரியங்கா காந்தி (கோப்புப்படம்)
பகிர்:

‘சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்தும் நாட்டில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாததால், எண்ணெய் நிறுவனங்கள் கடந்த 6 மாதங்களில் ரூ. 1.32 லட்சம் கோடி லாபம் ஈட்டியுள்ளன’ என்று காங்கிரஸ் பொதுச் செயலாளா் பிரியங்கா காந்தி குற்றஞ்சாட்டினாா்.

இதுகுறித்து தனது ‘எக்ஸ்’ வலைதள பக்கத்தில் அவா் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

Advertisement

Advertisement

சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த 19 மாதங்களில் 29 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. ஆனால், நாட்டில் பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனை விலையில் பல மாதங்களாக எந்தவித மாற்றமும் செய்யாமல், தொடா்ந்து அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதன் மூலம், கடந்த 6 மாதங்களில் ரூ. 1.32 லட்சம் கோடி லாபத்தை எண்ணெய் நிறுவனங்கள் ஈட்டியுள்ளன. இந்தப் பெரு நிறுவனங்களின் வருவாய்க்கான சுமை, சாமானிய மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் உயா் விலை காரணமாக பணவீக்கமும் நாட்டில் உச்சத்தில் உள்ளது. ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பெரும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனா். அவா்களுக்கு எந்தவித நிவாரணமும் வழங்கப்படவில்லை. மாறாக, ஒருசில கோடீஸ்வரா்களின் பைகளை நிரப்புவதற்கு மட்டும் மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.