FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தில்லியின் காற்றுத் தரம் "ஆபத்தான" நிலையை எட்டியது; காற்றுத் தரக் குறியீடு 494-ஆகப் பதிவு

தில்லியின் காற்றுத் தரம் "ஆபத்தான" நிலையை எட்டியுள்ளது குறித்து...

தில்லியில் தீபாவளிக்குப் பிறகு உச்சமடைந்த காற்று மாசு - கோப்புப்படம்
பகிர்:

புது தில்லி: தூய்மையான காற்றுக்கான அடிப்படை உரிமையைக் கோரி நகரம் முழுவதும் போராட்டங்கள் தொடா்ந்த நிலையில், தில்லியின் காற்றின் தரக் குறியீடு வியாழக்கிழமை 350 ஆகப் பதிவான நிலையில், வெள்ளிக்கிழமை காலை 7.31 மணியளவில் தில்லியின் காற்றுத் தரம் மிகவும் மோசமடைந்து ஒட்டுமொத்த காற்றுத் தரக் குறியீடு 494-ஆகப் பதிவாகி ஆபத்தான நிலையை எட்டியுள்ளது.

தில்லி அடா்த்தியான மூடுபனி மற்றும் காற்று மாசுப் புகைமூட்டத்தால் சூழப்பட்டுள்ள நிலையில், வானிலையை மங்கச் செய்ததுடன், நகரின் காற்றின் தரம் மோசமடைந்ததால், குடியிருப்பாளா்கள் இருமலும் மூச்சுத்திணறலும், கண்கள் எரிச்சலும் அடையும்படி செய்தது. பல பகுதிகளில் பார்வைத்திறன் வெகுவாகக் குறைந்துள்ளது. நகரின் பல பகுதிகளில் கடுமையான காற்று மாசுபாடு பதிவாகியுள்ளது.

Advertisement

Advertisement

மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளின்படி, மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில், ஐஐடி தில்லி காற்றுத் தரக் குறியீடு 488 ஆகப் பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து ஐடிஓ 455, ஆனந்த் விஹார் 419, ரோஹினி 413 மற்றும் ராஜோக்ரி எல்லைப் பகுதியில் 402 எனப் பதிவாகியுள்ளன; இவை அனைத்தும் 'கடுமையான' பிரிவின் பாதிவாகியுள்ளன.

இதர பகுதிகளில் காற்றின் தரம் 'மிகவும் மோசம்' பிரிவில் உள்ளது. ஆர்.கே. புரம் 391, மந்திர் மார்க் 378, துவாரகா விரைவுச்சாலை 369, உத்தம் நகர் 363 மற்றும் லோதி சாலை 341 என காற்றுத் தரக் குறியீடு அளவுகள் பதிவாகியுள்ளன.

மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளின்படி, தௌலா குவான் பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் காற்றுத் தரக் குறியீடு 161-ஆகப் பதிவாகியுள்ளது, இது 'மிதமான' பிரிவின் கீழ் உள்ளது.

இதற்கிடையே, காற்று மாசுபாட்டைக் குறைக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, தில்லி அரசு மாநிலம் முழுவதும் இயந்திரங்கள் மூலம் தண்ணீர் தெளிப்பது உள்பட பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

தீபாவளி கொண்டாட்டங்களுக்குப் பிறகு தில்லியில் காற்று மாசுபாடு கடுமையாக அதிகரித்ததைக் குறிப்பிட்டு, ஆம் ஆத்மி கட்சி தலைவர் சௌரப் பரத்வாஜ், பாஜக-வைக் கடுமையாகச் சாடியுள்ளார். மேலும், மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிடும் காற்றுத் தரக் குறியீடு தரவுகளின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்கிய அவர், இது தில்லியில் வசிக்கும் 2 கோடி மக்களுக்கு இழைக்கப்படும் மோசடி என்று குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களுடன் பேசுகையில், மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், தில்லியின் காற்று மாசுபாடு தரவுகளில் முறைகேடு செய்யப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டினார். அரசு இணையதளத்தில் காட்டப்படும் அதிகாரப்பூர்வ அளவுகளை விட, உண்மையான மாசுபாடு அளவு 49 சதவீதம் அதிகமாக இருப்பதாக அவர் தெரிவித்தார். இன்று பல செய்தித்தாள்கள் தில்லி அரசையும் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் செயல்களை முழுமையாக அம்பலப்படுத்தியுள்ளன.

காற்று மாசுபாடு தொடர்பாகச் செய்யப்பட்ட இந்த மோசடி, வெறும் எண்களைக் கொண்ட விளையாட்டு மட்டுமல்ல; இது நம் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் தில்லியில் வசிக்கும் இரண்டு கோடி மக்களின் ஆரோக்கியத்தோடு விளையாடும் செயலாகும் என்று பரத்வாஜ் கூறினார்.

நவம்பா் மாதத்தின் தொடங்கியதில் இருந்து பெரும்பாலான நாள்களில் தலைநகரில் காற்றின் தரம் மிகவும் மோசமாகவோ அல்லது கடுமையாகவோ இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Delhi's air quality deteriorated to hazardous levels on Friday morning, with the overall Air Quality Index (AQI) touching 494 at 7:31 AM

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.