பயணிகளின் லக்கேஜ்களை விமான நிலையத்திலேயே விட்டு பறந்த இண்டிகோ விமானம்!
ஹைதராபாத் விமான நிலையத்தில் இருந்து 37 பயணிகளின் லக்கேஜ்களை கவனக்குறைவாக விமான நிலையத்திலேயே விட்டுவிட்டு பயணிகளை ஏற்றிச் சென்றது இண்டிகோ விமானம்.
ஹைதராபாத்: ஹைதராபாத் விமான நிலையத்தில் இருந்து 37 பயணிகளின் லக்கேஜ்களை கவனக்குறைவாக விமான நிலையத்திலேயே விட்டுவிட்டு பயணிகளை ஏற்றிச் சென்றது இண்டிகோ விமானம்.
இதுதொடர்பாக இண்டிகோ விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இதையும் படிக்க | விண்ணில் பாய்ந்தது எஸ்எஸ்எல்வி டி2 ராக்கெட்!
Advertisement
Advertisement
"ஹைதராபாத்தில் இருந்து விசாகப்பட்டினத்திற்கு புறப்பட்ட 6E 409 விமானத்தில் சென்ற 37 பயணிகளின் லக்கேஜ்கள் கவனக்குறைவாக விட்டுச் சென்றதை இண்டிகோ விமான நிறுவனம் வியாழக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது".
மேலும், விசாகப்பட்டினத்தில் உள்ள வாடிக்கையாளர்களின் முகவரிகளுக்கு அனைத்து பைகளும் பாதுகாப்பாக வழங்கப்படுவதை உறுதி செய்வதாகவும், பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துவதாகவும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.