தென்னாப்பிரிக்காவில் இருந்து 12 சிவிங்கிப் புலிகள் இந்தியா வருகை!
தென்னாப்பிரிக்காவில் இருந்து 12 சிவிங்கிப் புலிகள் இந்தியா கொண்டு வரப்படுவதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவில் இருந்து 12 சிவிங்கிப் புலிகள் இந்தியா கொண்டு வரப்படுவதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் தெரிவித்துள்ளார்.
வருகிற பிப்ரவரி 18 ஆம் தேதி தென்னாப்பிரிக்காவில் இருந்து 7 ஆண், 5 பெண் என 12 சிவிங்கிப் புலிகள் கொண்டு வரப்பட உள்ளன.
இவை இந்திய விமானப்படையின் உதவியுடன் தென்னாப்பிரிக்காவின் கௌடங் விமான நிலையத்தில் இருந்து மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் விமானப்படை தளத்திற்கு வந்து, பின்னர் ஹெலிகாப்டர்கள் மூலமாக குனோ தேசிய பூங்காவிற்கு கொண்டு வரப்படுகின்றன. இதற்காக குனோ தேசிய பூங்காவில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.