திருமண விழாவிற்கு சென்றவருக்கு நேர்ந்த சோகம்: பாகிஸ்தானில் பேருந்து கவிழ்ந்து 14 பேர் பலி!
பாகிஸ்தானின் கல்லார் கஹார் அருகே லாகூர்-இஸ்லாமாபாத் நெடுஞ்சாலையில் பேருந்து கவிழ்ந்ததில் பெண்கள், குழந்தைகள் உள்பட 14 பேர் கொல்லப்பட்டனர். 46 பேர் காயமடைந்தனர்.
பாகிஸ்தானின் கல்லார் கஹார் அருகே லாகூர்-இஸ்லாமாபாத் நெடுஞ்சாலையில் பேருந்து கவிழ்ந்ததில் பெண்கள், குழந்தைகள் உள்பட 14 பேர் கொல்லப்பட்டனர். 46 பேர் காயமடைந்தனர்.
திருமண விருந்தில் பங்கேற்று இஸ்லாமாபாத்திலிருந்து லாகூர் நோக்கி பேருந்தில் திரும்பிக்கொண்டிருந்தபோது, எதிர்த் திசையில் வந்த இரண்டு கார்கள், டிரக்கின் மீது பேருந்து மோதியது. இதில் பேருந்தின் டயர் வெடித்து சாலையை விட்டு விலகிச் சென்றது.
இந்த விபத்தில் 14 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 46 பேர் காயமடைந்தன நிலையில் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
Advertisement
Advertisement
பேருந்தில் 49 பேர் பயணித்துள்ளனர். பேருந்து ஓட்டுநரின் அலட்சியமே விபத்துக்கான காரணம் என்று தெரிய வந்துள்ளது. பேருந்தில் பயணித்த காயமடைந்த 13 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளது.
இந்த விபத்து குறித்து பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததோடு, காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ வசதிகளை வழங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.