டெங்கு பரவல் : தில்லி முதல்வர் ஆலோசனை!
டெங்கு பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தலைமையில் நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
டெங்கு பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தலைமையில் நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தக் கூட்டத்தில் தில்லியின் சுகாதாரத் துறை அமைச்சர் சௌரப் பரத்வாஜ் மற்றும் தில்லி மேயர் ஷெல்லி ஓபராய் கலந்து கொண்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிக்க: சத்தீஸ்கர்: மாணவர்களை மசாஜ் செய்ய வற்புறுத்திய அரசுப் பள்ளி ஆசிரியர் இடைநீக்கம்
Advertisement
Advertisement
தில்லியில் இந்த ஆண்டில் ஜூலை 22 நிலவரப்படி மொத்தமாக 187 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2018 ஆம் ஆண்டிலிருந்து தற்போது அதிகமானோர் தில்லியில் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது: டெங்கு பரவலை தடுப்பது தொடர்பான கூட்டம் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தலைமையில் மதியம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் உள்பட பல்வேறு அதிகாரிகள் பங்கேற்றனர். தில்லியில் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக இந்தக் கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது என்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.