FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

பாரமுல்லாவில் பயங்கரவாதிகள் 2 பேர் கைது

ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டதில் தடைசெய்யப்பட்ட லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த இரண்டு பேரை பாரமுல்லா போலீசார் கைது செய்துள்ளனர். 

Updated On : 8 மார்ச் 2023, 9:52 am IST
பகிர்:

 
பாரமுல்லா:
ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டதில் தடைசெய்யப்பட்ட லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த இரண்டு பேரை பாரமுல்லா போலீசார் கைது செய்துள்ளனர். 

இதுகுறித்து பாரமுல்லா போலீசார் தெரிவித்துள்ளதாவது: 
பாரமுல்லா மாவட்டத்தின் குன்ஸர் கிராமப் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, அப்பகுதிக்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

அப்போது, தடை செய்யப்பட்ட பயங்கவாத அமைப்பான லஷ்கர்-ஏ-தொய்பாவைச் (டிஆர்எஃப்) சேர்ந்த குர்ஷித் அகமது கான் மற்றும் ரியாஸ் அகமது கான் ஆகியோரை கைது செய்தனர். 

Advertisement

Advertisement

மேலும், அவர்களிடம் இருந்து 2 ஏகே 47 ரக துப்பாகிகள், அதில் பயன்படுத்தப்படும் 15 தோட்டாக்கள்,  20 லஷ்கர் பயங்கரவாத அமைப்பின்  சுவரொட்டிகள் மற்றும் பிற  பொருள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். 

அவர்களிடம் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில், அவர்கள் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-ஏ-தொய்பா (டிஆர்எஃப்) கூட்டாளிகளாக செயல்படுவது தெரியவந்தது. இதுதொடர்பாக அவர்கள் மீது குன்ஸர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என பாரமுல்லா போலீசார் தெரிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments