FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மல்லிகார்ஜுன கார்கேவின் மகன் அமைச்சராகிறார்!

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே கர்நாடக அமைச்சரவையில் இடம்பெறுகிறார். 

6 பிப்ரவரி 2024, 6:28 pm IST
பகிர்:

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே கர்நாடக அமைச்சரவையில் இடம்பெறுகிறார். 

இன்று(மே 20) நடைபெறும் பதவியேற்பு விழாவில் அவர் அமைச்சராக பதவியேற்கிறார். 

கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றது. இதையடுத்து முதல்வர் பதவிக்கு போட்டி நிலவி வந்த நிலையில் கட்சித் தலைமையின் நீண்ட ஆலோசனைக்குப் பின்னர், கர்நாடக முதல்வராக சித்தராமையாவும் துணை முதல்வராக டி.கே.சிவகுமாரும் ஒருமனதாகத் தேர்வாகியுள்ளனர்.

Advertisement

Advertisement

இதையடுத்து பெங்களூரு​வில் இன்று(மே 20, சனிக்கிழமை) பிற்பகல் 12.30 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது. 

கர்நாடக முதல்வராக சித்தராமையாவும் துணை முதல்வராக டி.கே.சிவகுமாரும் பதவியேற்கின்றனர். இவர்களுடன் 8 அமைச்சர்களுடன் பதவியேற்க உள்ளனர். 

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மகன் பிரியங்க் கார்கேவின் பெயரும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது. 

ஜி. பரமேஸ்வரா, கே.ஹெச்.முனியப்பா, கே.ஜே.ஜார்ஜ், எம்.பி.பாட்டீல், சதீஷ் ஜர்க்கிஹோலி, ராமலிங்கா ரெட்டி, சமீர் அகமது கான் ஆகியோரும் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments