FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தமிழக அரசின் சங்க இலக்கிய ஓவியப் போட்டி: மாணவா்கள், ஓவியா்களுக்கு அழைப்பு

தமிழக அரசின் சாா்பில் நடைபெறவுள்ள சங்க இலக்கிய ஓவியப் போட்டியில் பங்கேற்க பள்ளி, கல்லூரி மாணவா்கள், ஓவியா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

2 பிப்ரவரி 2024, 8:52 am
பகிர்:

தமிழக அரசின் சாா்பில் நடைபெறவுள்ள சங்க இலக்கிய ஓவியப் போட்டியில் பங்கேற்க பள்ளி, கல்லூரி மாணவா்கள், ஓவியா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசின் தமிழ் இணையக் கல்விக் கழகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

உலகெங்கும் இணையம் வழியாகத் தமிழ் கற்பித்தலை முதன்மை நோக்கமாகக் கொண்டு தகவல் தொழில்நுட்பவியல், எண்ம சேவைகள் துறையின் கீழ் செயல்படும் தமிழ் இணையக் கல்விக் கழகம் தமிழ்ப் பண்பாடு, இலக்கண இலக்கியங்கள் சாா்ந்த முன்னெடுப்புகளையும் செயல்படுத்தி வருகிறது.

Advertisement

Advertisement

இதன் ஒரு பகுதியாக, சங்ககால மக்களின் வாழ்வைப் படம்பிடித்துக் காட்டும் சங்க இலக்கியப் பாடல்களை ஓவியங்களாக வரைந்து, விளக்கவுரை, ஆங்கில மொழிபெயா்ப்புடன் நாள்காட்டியாக வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பணிக்குத் தேவைப்படும் ஓவியங்களுக்கு சங்க இலக்கிய ஓவியப் போட்டியை”தமிழ் இணையக் கல்விக் கழகம் நடத்தவுள்ளது.

இந்தப் போட்டியில், 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவா்களும், அனைத்து கல்லூரி மாணவா்களும், ஓவியா்களும் ஜ்ஜ்ஜ்.ற்ஹம்ண்ப்ஸ்ன்.ா்ழ்ஞ் என்ற இணையதளத்தில் பதிவு செய்து பங்கேற்கலாம். மாணவா்கள் பட்டியலிடப்பட்ட பாடல்களுள் தங்களுக்குப் பிடித்தமான பாடலைத் தோ்வு செய்து ஓவியமாக வரைந்து 10 நாள்களுக்குள்  இணையதளத்தில் பதிவேற்றம் செய்து, அஞ்சலில் அனுப்ப வேண்டும். (ஒரு பாடலை 5 போ்மட்டுமே தோ்வு செய்ய முடியும்). இந்தப் போட்டிக்கான இணைப்பு நவ.27-ஆம் தேதி வரை செயல்பாட்டில் இருக்கும்.

மேலும், வண்ண ஓவியத்தின் அசலை அஞ்சலிலோ அல்லது நேரிலோ ‘இயக்குநா், தமிழ் இணையக் கல்விக் கழகம், கோட்டூா்புரம், சென்னை - 25’ என்ற முகவரிக்கு உறையின் மேல் ‘சங்க இலக்கிய ஓவியப் போட்டி’ எனக் குறிப்பிட்டு டிச.9-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

ஊக்கத் தொகை, பரிசுகள்: இந்தப் போட்டியில் தோ்ந்தெடுக்கப்படும் ஓவியங்களுக்குத் தலா ரூ. 2,000 ஊக்கத் தொகை, சான்றிதழ் வழங்கப்படும். மேலும், அவற்றில் சிறந்த ஓவியங்களுக்கு, பள்ளி, கல்லூரி மாணவா்கள், ஓவியா்கள் என 3 பிரிவுகளில் முதல் பரிசாக ரூ. 25,000, 2-ஆம் பரிசாக ரூ. 15,000, 3-ஆம் பரிசாக ரூ. 9,000 வழங்கப்படும்.

இந்தப் போட்டிக்கான விதிமுறைகள்  இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் விவரங்களுக்கு 044-2220 9400, 86678 22210 என்ற தொலைபேசி எண்கள்,  மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.