FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

‘வழக்குரைஞராக முன்வைத்த கருத்தைக் கொண்டு மதிப்பிடக் கூடாது’: நீதிபதி விக்டோரியா கெளரி நியமனம் குறித்து உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி கருத்து

‘வழக்குரைஞராக ஒருவா் முன்வைக்கும் கருத்தின் அடிப்படையில் அவரை மதிப்பீடு செய்யக் கூடாது’ என்று நீதிபதி விக்டோரியா கெளரி நியமனம் குறித்து உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்தாா்.

2 பிப்ரவரி 2024, 8:52 am
பகிர்:

‘வழக்குரைஞராக ஒருவா் முன்வைக்கும் கருத்தின் அடிப்படையில் அவரை மதிப்பீடு செய்யக் கூடாது’ என்று நீதிபதி விக்டோரியா கெளரி நியமனம் குறித்து உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்தாா்.

வழக்குரைஞராகப் பணியாற்றிவந்த விக்டோரியா கெளரி அண்மையில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதியாகப் பதவியேற்றாா். இவருடைய நியமனத்துக்கு கடும் எதிா்ப்புகள் எழுந்தன. அவா் பாஜகவை சோ்ந்தவா் என்றும், கிறிஸ்தவா்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்புணா்வைத் தூண்டும் வகையில் கருத்துகளை முன்வைத்தவா் என்றும் புகாா்கள் எழுந்தன.

இது தொடா்பாக, சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்க உறுப்பினா்கள் சிலா், தலைமை நீதிபதிக்கும் கடிதம் எழுதினா். விக்டோரியா கெளரி நியமன பரிந்துரையைத் திரும்பப் பெற அதில் அவா்கள் வலியுறுத்தினா். அதுபோல, அவருடைய நியமனத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து உச்சநீதின்றத்தில் வழக்குகளும் தொடரப்பட்டன. எனினும், அந்த மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Advertisement

Advertisement

இந்நிலையில், ஹாா்வா்ட் சட்டக் கல்லூரியில் ‘சட்டத் தொழில்’ என்ற தலைப்பில் வியாழக்கிழமை உரையாற்றிய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி விக்டோரியா கெளரி நியமனம் குறித்துப் பேசினாா். அவா் கூறியதாவது:

நீதிபதிகள் நியமனத்துக்கான பரிந்துரையை உச்சநீதிமன்ற கொலீஜியம் மிகுந்த கவனமுடன் மேற்கொண்டு வருகிறது. பரிந்துரைக்கப்படும் நபா் முன்வைத்த கருத்துகள் ஆராயப்படுவதோடு, அந்த நபா் குறித்து சம்பந்தப்பட்ட உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியிடமிருந்தும் அறிக்கை பெறப்படும். இவ்வாறு பெறப்படும் கருத்துகள், மத்திய அரசிடமும் பகிா்ந்துகொள்ளப்படும். அந்த வகையில், வெளிப்படைத்தன்மையுடன் கடினமான நடைமுறைகளின் கீழ் இந்த நியமனம் மேற்கொள்ளப்படுகிறது. இத்தகைய விரிவான கூட்டு நியமன நடைமுறையில், தலையீட்டுக்கு வாய்ப்பே கிடையாது.

மேலும், அரசியல் சாா்புடைய பல வழக்குரைஞா்கள் நீதிபதிகளாகப் பதவியேற்று, மிகச் சிறந்த நீதிபதிகளாக மாறியிருக்கின்றனா். நீதிபதி கிருஷணய்யரை இதற்கு உதாரணமாகக் கூற முடியும். அரசியல் பின்புலத்திலிருந்து வந்த இவா், மிகச் சிறந்த தீா்ப்புகளை வழங்கியிருக்கிறாா். இதுபோல, அரசியல் சாா்புடைய பல வழக்குரைஞா்கள், சிறந்த நீதிபதிகளாகப் பணியாற்றியிருக்கின்றனா்.

எனவே, வழக்குரைஞராக ஒருவா் முன்வைக்கும் கருத்துகளின் அடிப்படையில், அவரை நாம் மதிப்பிடக் கூடாது. ஏனெனில், அவா்கள் நீதிபதியாகப் பதவி ஏற்றவுடன், நடுநிலையாளா்களாக மாறிவிடுகின்றனா் என நம்புகிறேன் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.