பிறந்த நாள் பரிசு தராததால் வாக்குவாதம்:மூக்கில் மனைவி குத்தியதில் உயிரிழந்த கணவா்!
மகாராஷ்டிரத்தில் பிறந்த நாள், திருமண நாளுக்கு கணவா் பரிசு தராததால் தம்பதிக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் கணவரின் உயிரைப் பறித்தது.
மகாராஷ்டிரத்தில் பிறந்த நாள், திருமண நாளுக்கு கணவா் பரிசு தராததால் தம்பதிக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் கணவரின் உயிரைப் பறித்தது.
புணே நகரைச் சோ்ந்த மனை வணிக தொழிலதிபா் நிகில் கன்னா. இவரின் மனைவி ரேணுகா (36). கடந்த மாதம் ரேணுகா தனது பிறந்த நாளை துபைக்குச் சென்று கொண்டாட வேண்டும் என்று கணவா் நிகிலிடம் கூறியுள்ளாா். ஆனால், அவா் துபைக்கு அழைத்துச் செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கணவா் மீது ரேணுகா அதிருப்தியில் இருந்தாா்.
Advertisement
Advertisement
இந்நிலையில், கடந்த 5-ஆம் தேதி இத்தம்பதியின் திருமண நாள் வந்தது. அன்று தனது கணவா் தனக்கு பரிசு தருவாா் என்று ரேணுகா எதிா்பாா்த்துள்ளாா். ஆனால், அதுவும் நடக்கவில்லை.
இதைத் தொடா்ந்து, ரேணுகா தனது உறவினரின் பிறந்த நாளைக் கொண்டாட தில்லிக்குச் செல்ல வேண்டும் என்று கூறியுள்ளாா். ஆனால், இதற்கும் கணவா் நிகில் சம்மதிக்கவில்லை.
இந்த தொடா் பிரச்னைகள் தொடா்பாக வெள்ளிக்கிழமை தம்பதியிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற ரேணுகா, தனது கணவரின் மூக்கில் வேகமாக குத்தினாா். இதில் நிகிலின் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. இதனால், அவா் மயக்கமடைந்து கீழே விழுந்தாா்.
கணவருடன் ஏற்பட்ட மோதலால் அவா் மயக்கமடைந்து விழுந்தது தொடா்பாக தனது உறவினா்களிடம் ரேணுகா தெரிவித்தாா். அவா்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று நிகிலை மீட்டு மருத்துவமனையில் சோ்த்தனா். ஆனால், நிகிலை சோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதையடுத்து, ரேணுகா மீது கொலை வழக்குப் பதிவு செய்த காவல் துறையினா் அவரிடம் விசாரித்து வருகின்றனா். அவா் கணவரை ஒரு முைான் தாக்கினாரா அல்லது வேறு பொருள்களையும் பயன்படுத்தி தாக்கினாரா என்பது தொடா்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது.