FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மணல் கடத்தலை தடுக்கச் சென்ற அதிகாரி மீது டிராக்டர் ஏற்றிக் கொலை!

மத்தியப் பிரதேசத்தில் மணல் கடத்தலை தடுக்கச் சென்ற வருவாய்த் துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2 பிப்ரவரி 2024, 8:55 am
கோப்புப்படம்
பகிர்:

போபால் : மத்தியபிரதேசத்தில் மணல் கடத்தலை தடுக்கச் சென்ற வருவாய்த் துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியபிரதேசத்தின் சாஹ்தோல் மாவட்டத்தில் கோபால்பூர் பகுதியில் சன் ஆற்றின் கரையோரம் சட்டவிரோதமாக மணல் கடத்தப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன. 

Advertisement

Advertisement

இந்தநிலையில், இதுகுறித்து ஆய்வு செய்வதற்காக  பிரசன் சிங் உள்பட 4 வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்றிரவு (நவ. 25) சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.

அப்போது, அங்கு ஒரு டிராக்டரில் மணல் கடத்தி செல்லப்படுவதை கண்ட பிரசன் சிங், அந்த வாகனத்தை தடுத்து நிறுத்த முற்பட்டுள்ளார். ஆனால், டிராக்டர் ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தாமல், வழிமறித்த அதிகாரி பிரசன் சிங் மீது டிராக்டரை ஏற்றிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

இதில், சம்பவ இடத்திலேயே பிரசன் சிங் உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, தப்பிச்சென்ற டிராக்டர் ஓட்டுநரை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்தநிலையில், அதிகாரி மீது டிராக்டர் ஏற்றிக் கொன்ற 25 வயதான டிராக்டர் ஓட்டுநர்  சுபம் விஸ்வகர்மா இன்று (நவ. 26) கைது செய்யப்பட்டார். மேலும், டிராக்டரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிராக்டர் ஏற்றி அதிகாரி கொல்லப்பட்ட சம்பவத்துக்கு காங்கிரஸ் தலைவரும், மத்தியபிரதேச முன்னாள் முதல்வருமான கமல்நாத் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இந்த சம்பவம் குறித்து  தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது, “மத்திய பிரதேசத்தில் மணல் மாஃபியாவால் அரசு அதிகாரிகள் கொல்லப்படுவது இது முதன் முறையல்ல.

மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் அரசில், பெருகி வரும் ஊழல் மற்றும் முறைகேடுகளால் இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன” என்று பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.