மொபைல் போனுக்கு அடிமையான மகனைக் கொன்ற தந்தை!
கர்நாடகம் மைசூரு மாவட்டத்தில் மொபைல் போனுக்கு அடிமையான தனது மகனை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகம் மைசூரு மாவட்டத்தில் மொபைல் போனுக்கு அடிமையான தனது மகனை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் மைசூர் பன்னிமண்டபப் பகுதியில் நடைபெற்றுள்ளது. உயிரிழந்தவர் உமைஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பாக அவரது தந்தை அஸ்லாம் பாஷைவை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில்,
Advertisement
Advertisement
உமைஸ் தொடர்ந்து மொபைல் போன் பயன்படுத்தி வருவதை தந்தை அஸ்லம் கண்டித்துள்ளார். இதுதொடர்பாக அடிக்கடி இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, நவ.29-ம் தேதி புதன்கிழமை மீண்டும் மொபைல் போன் பயன்படுத்துவது தொடர்பாக இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கடும் கோபமடைந்த அஸ்லாம் திடீரென கத்தியை எடுத்து மகனைக் குத்தியுள்ளார்.
படுகாயமடைந்த உமைஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை மேற்கொண்டு போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.