FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ஐந்து மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சியமைக்கும்: கார்கே

ஐந்து மாநிலத் தேர்தல்களிலும் வெற்றி பெற்று ஆட்சியமைப்போம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். 

Updated On : 25 அக்டோபர் 2023, 12:44 pm IST
கோப்புப்படம்
பகிர்:

ஐந்து மாநிலத் தேர்தல்களிலும் வெற்றி பெற்று ஆட்சியமைப்போம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். 

சத்தீஸ்கா், மத்திய பிரதேசம், மிஸோரம், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரம் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளன. 

Advertisement

Advertisement

இந்நிலையில் கர்நாடகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, 'சத்தீஸ்கர், ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அங்கு மக்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. 

ஐந்து மாநிலத் தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சியின் பணிகள் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஐந்து மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. 

பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற காரணங்களால் பாஜக ஆட்சிக்கு எதிரான மனநிலை மக்களிடையே ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு எதிராக மக்கள் உள்ளனர். 

பாஜக அளித்த வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றவில்லை. வேலைவாய்ப்பு, விவசாயிகள் வருமானம் இரட்டிப்பு என எதையும் பாஜக நிறைவேற்றவில்லை. 

மத்திய அரசின் எந்த திட்டங்களும் கர்நாடகத்திற்கு வழங்கப்படவில்லை' என்று பேசினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments