ராஜஸ்தானில் ராகுல் காந்தி!
கட்சி விழாவுக்காக ராஜஸ்தான் மாநிலத் தலைநகர் ஜெயப்பூர் வந்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இன்று சனிக்கிழமை ஒருநாள் பயணமாக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு வந்தார்.
ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் ராகுல் காந்தியை ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட், காங்கிரஸ் கட்சியின் மாநில பொறுப்பாளர் சுக்ஜிந்தர் ரந்தாவா, கட்சியின் மாநிலத் தலைவர் கோவிந்த் சிங் தோடஸ்ரா ஆகியோர் வரவேற்றனர்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேயும் ராகுல் காந்தியும் இன்று ஜெய்ப்பூரின் மான்சரோவர் பகுதியில் புதிய மாநில காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்திற்கான அடிக்கல் நாட்டும் விழாவில் கலந்துகொண்டு பேசுகிறார்கள்.
Advertisement
Advertisement
இதுபற்றி காங்கிரஸ் மாநிலத் தலைவர் கோவிந்த் சிங் தோடஸ்ரா கூறுகையில், இந்த விழா எங்களுக்கு மேலும் பலம் சேர்க்கும், நிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கைப்பற்றும் என்று நம்பிக்கை தெரிவித்தார். ராஜஸ்தானில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.