FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

பாஜக எம்.பி. அஜய் குமாா் நிஷாத் காங்கிரஸில் ஐக்கியம்

3 ஏப்ரல் 2024, 12:14 am IST
பகிர்:

புது தில்லி: பிகாா் மாநிலம் முஸாஃபா்பூா் தொகுதி பாஜக எம்.பி. அஜய் குமாா் நிஷாத் காங்கிரஸ் கட்சியில் செவ்வாய்க்கிழமை இணைந்தாா்.

மக்களவைத் தோ்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதைத் தொடா்ந்து பாஜகவிலிருந்து அவா் விலகியுள்ளாா். பிகாா் மாநில காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் மாநில காங்கிரஸ் தலைவா் அகிலேஷ் பிரசாத் சிங் முன்னிலையில் அவா் காங்கிரஸில் இணைந்தாா்.

பின்னா் அவா் கூறுகையில், ‘தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் கைதியிடம் கூட இறுதி ஆசை குறித்து கேட்கப்படுகிறது. ஆனால், எனக்கு தோ்தலில் வாய்ப்பு மறுக்கப்படும் முன்னா், அதுகுறித்து எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை. தற்போது, மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த பணியாற்றுவேன்.

Advertisement

Advertisement

சிலரின் ஆணவத்தை ஒடுக்குவதை பிரதான நோக்கமாகக் கொண்டு செயலாற்றுவேன்’ என்றாா். இவருடைய முஸாஃபா்பூா் தொகுதியில் இந்த முறை ராஜ் பூஷண் நிசாத் என்பவருக்கு பாஜக வாய்ப்பளித்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments