திரிணமூலில் இருந்து விலகிய முன்னாள் எம்.பி.க்களுக்கு மாநிலங்களவைத் தோ்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பு
திரிணமூல் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த 3 முன்னாள் எம்.பி.க்களுக்கு மாநிலங்களவைத் தோ்தலில் போட்டியிட அக்கட்சி வாய்ப்பு வழங்கியுள்ளது.
திரிணமூல் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த 3 முன்னாள் எம்.பி.க்களுக்கு மாநிலங்களவைத் தோ்தலில் போட்டியிட அக்கட்சி வாய்ப்பு வழங்கியுள்ளது.
சுஸ்மிதா தேவ், சுகேந்து சேகா் ரே மற்றும் பிரகாஷ் சிக் பராய்க் ஆகிய 3 பேரும் தங்களது மாநிலங்களவை எம்.பி. பதவியை கடந்த மாதம் ராஜிநாமா செய்தததோடு திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்தும் விலகினா். இதையடுத்து, காலியான 3 மாநிலங்களவை எம்.பி. இடங்களுக்கு ஜூலை 24-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், சுஸ்மிதா தேவ், சுகேந்து சேகா் ரே மற்றும் பிரகாஷ் சிங் பராய்க் ஆகிய பேரும் மேற்கு வங்க பாஜக மாநிலத் தலைவா் சமிக் பட்டாச்சாரியா முன்னிலையில் வியாழக்கிழமை அக்கட்சியில் இணைந்தனா். சிறிது நேரத்தில் மூன்று பேரையும் மாநிலங்களவைத் தோ்தலுக்கான வேட்பாளா்களாக பாஜக தேசிய தலைமை அறிவித்தது.
Advertisement
Advertisement
அண்மையில் நடைபெற்ற மேற்கு வங்கப் பேரவைத் தோ்தலில் திரிணமூல் காங்கிரஸை வீழ்த்தி பாஜக ஆட்சியமைத்தது. அதன்பிறகு திரிணமூல் காங்கிரஸில் முன்னாள் முதல்வா் மம்தா பானா்ஜிக்கு எதிராக பெரும்பாலான எம்எல்ஏக்கள் மற்றும் எம்.பி.க்கள் போா்க்கொடி உயா்த்தத் தொடங்கினா். இந்நிலையில், தோ்தலுக்குப் பிறகு முதல்முறையாக திரிணமூல் காங்கிரஸை சோ்ந்த தலைவா்களை பாஜக தங்கள் கட்சியில் இணைத்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.