FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ரூ.1 கோடி வருவாய் ஈட்டும் மணமகன் தேவை: வைரல் பதிவு!

கோடி வருவாய் வேண்டும்: மணமகளின் அதிரடி விருப்பம்!

Updated On : 4 ஏப்ரல் 2024, 7:17 pm IST
பகிர்:

மும்பையைச் சேர்ந்த 37 வயதான பெண்ணின் வாட்ஸ்ஆப் உரையாடல் சமூக வலைத்தளமான எக்ஸில் வைரலாகி வருகிறது.

அந்த உரையாடலில் தனக்கான மணமகன் ஆண்டுக்கு ரூ.1 கோடி வருவாய் கொண்டவராக இருக்க வேண்டும் என அவர் கேட்பதுதான் பயனர்களின் ஆரவாரத்துக்குk காரணம்.

அம்பர் என்கிற எக்ஸ் கணக்கில் இணைக்கப்பட்டுள்ள வாட்ஸ்ஆப் உரையாடலில், மும்பையைச் சேர்ந்த பெண், நிலையான வேலையோ வணிகமோ அதே நகரில் கொண்டுள்ள மணமகனைத் தேடுவதாக குறிப்பிடுகிறார்.

Advertisement

Advertisement

அந்த பெண் தனக்கான ஆண்டு வருவாய் ரூ. 4 லட்சம் எனத் தெரிவிக்கிறார். நல்ல கல்வி பின்புலம் கொண்ட அறுவை சிகிச்சை நிபுணராகவோ பட்டய கணக்காளராகவோ இருந்தால் சரியென்றும் ஆண்டு வருவாய் குறைந்தது ரூ.1 கோடி இருக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுள்ளார்.

இந்த பதிவு 6 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. பல்வேறு வகையிலான கருத்துகள் இந்த பதிவில் பயனர்களால் முன்வைக்கப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments