FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ஹிமாசல் வெள்ளம்: பாதிப்பு தொடர்பாக பிரதமரைச் சந்தித்துப் பேசிய ஜெய்ராம் தாக்குர்!

ஹிமாசலப் பிரதேச முன்னாள் முதல்வர் ஜெய்ராம் தாக்குர் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு குறித்து பிரதமரிடம் தெரிவித்தார்.

Updated On : 2 ஆகஸ்ட் 2024, 10:36 pm IST
பிரதமர் நரேந்திர மோடியுடன் ஹிமாசலப் பிரதேச முன்னாள் முதல்வர் ஜெய்ராம் தாக்குர்
பகிர்:

தில்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த ஹிமாசலப் பிரதேச முன்னாள் முதல்வர் ஜெய் ராம் தாக்குர் சிம்லா, குலு மற்றும் மந்தி மாவட்டங்களில் மேக வெடிப்பு மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அவரிடம் தெரிவித்ததாகக் கூறியுள்ளார்.

கடந்த வாரம் குலு, மந்தி மற்றும் சிம்லா ஆகிய மூன்று மாவட்டங்களில் மேக வெடிப்பினால் ஏற்பட்ட மழை காரணமாக திடீர் வெள்ளம் ஏற்பட்டது.

ஹிமாசலில் இந்தத் திடீர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று 8 ஆக உயர்ந்துள்ள நிலையில், இன்னும் 45 பேரைக் கண்டறியும் முயற்சியில் மீட்புப் படையினர் ட்ரோன்களை பயன்படுத்தி தேடி வருகின்றனர்.

Advertisement

Advertisement

வெள்ளத்தில் பாதிக்கபட்ட மக்களுடன் ஹிமாசல் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு - ANI

குலு பகுதியில் உள்ள ஸ்ரீகாந்த் மகாதேவா பகுதியைச் சுற்றி சிக்கித் தவிக்கும் சுமார் 300 பேர் பத்திரமாக இருப்பதாகவும், மலானா பகுதியில் சிக்கிய 25 சுற்றுலாப் பயணிகளை உள்ளூர் மக்கள் கவனித்துக் கொண்டதாகவும் தலைமைச் செயலாளர் பிரபோத் சக்சேனா தெரிவித்துள்ளார்.

மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக உறுதியளித்த பிரதமர், நிவாரணப் பணிகளில் முழுமையாக ஈடுபடுமாறு கட்சித் தொண்டர்களிடம் கேட்டுக் கொண்டதாக ஜெய்ராம் தாக்குர் தெரிவித்துள்ளார்.

மேலும், உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் தேசிய பாஜக தலைவர் ஜேபி நட்டா ஆகியோர் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகுவைத் தொடர்பு கொண்டு, மாநிலத்திற்கு அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்ததாக தாக்கூர் கூறினார்.

இதற்கிடையில், வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட தனியே குழு அமைத்துள்ள ஹிமாச்சலப் பிரதேச பாஜக தலைவர் ராஜீவ் பிண்டல், தனது குழுவினருடன் ராம்பூர் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தார்.

மேலும் குலு மற்றும் மந்தி பகுதிகளில் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹிமாசல் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு குழு பார்வையிட்டதாகவும் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments