FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கேரள முன்னாள் அமைச்சர் குட்டி அகமது குட்டி காலமானார்

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மூத்த தலைவரும் கேரள முன்னாள் அமைச்சருமான குட்டி அகமது குட்டி காலமானார்.

11 ஆகஸ்ட் 2024, 5:57 pm
குட்டி அகமது குட்டி
பகிர்:

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மூத்த தலைவரும் கேரள முன்னாள் அமைச்சருமான குட்டி அகமது குட்டி காலமானார்.

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மூத்த தலைவரான இவர் 2004-06ஆம் ஆண்டு உம்மன் சாண்டி தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக பதவி வகித்துள்ளார். தொடர்ந்து 2005ஆம் ஆண்டில் நிகழ்ந்த கார் விபத்துக்குப் பிறகு அவர் சில ஆண்டுகளாக அரசியலில் ஈடுபடாமல் இருந்தார்.

தற்போது தமுமுகவின் மாநில செயற்குழு உறுப்பினராக உள்ள குட்டி அகமது குட்டி, கட்சியின் மாநில துணைத் தலைவராகவும், மாவட்ட செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். 1992 இடைத்தேர்தலில் தனுரில் இருந்து எம்எல்ஏவாகவும், பின்னர் 1996 மற்றும் 2001 இல் திருஅங்காடியில் இருந்தும் எம்எல்ஏவாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Advertisement

Advertisement

இந்த நிலையில் வயது தொடர்பான நோய்களால் குட்டி அகமது குட்டி தனுரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலமானதாக குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன. அவருக்கு வயது 71. குட்டி அகமது குட்டி மறைவுக்கு முதல்வர் பினராயி விஜயன், எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன், காங்கிரஸ் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேலும் குட்டி அகமதுவுக்கு மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.