FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சம்பல் மாவட்டத்துக்குச் செல்கிறார் ராகுல்!

வன்முறையால் பாதிக்கப்பட்ட சம்பல் மாவட்டத்திற்குச் செல்கிறார்..

3 டிசம்பர் 2024, 5:39 pm
ராகுல் காந்தி
பகிர்:

வன்முறையால் பாதிக்கப்பட்ட உத்தப் பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட இடங்களை மக்களவையின் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நாளை பார்வையிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த நவம்பர் 19ஆம் தேதி முதல் மசூதியில் ஹரிஹர் கோவில் இருப்பதாக ஒரு மனுவைத் தொடர்ந்து நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் முதன்முதலில் ஆய்வு செய்யப்பட்டபோது சம்பாலில் பதற்றம் நிலவியது. ஞாயிற்றுக்கிழமை, மசூதிக்கு அருகே ஏராளமான மக்கள் கூடி, ஆய்வுக் குழு மீண்டும் பணியைத் தொடங்கியபோது கோஷங்களை எழுப்பத் தொடங்கினர். அப்போது பாதுகாப்புப் படை வீரர்களுடன் மோதலில் ஈடுபட்ட அவர்கள், வாகனங்களை எரித்தும், கற்களை வீசியும் தாக்குதல் நடத்தினர்.

இந்த வன்முறையில் நான்கு பேர் இறந்துள்ளனர், மேலும் பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் நிர்வாக அதிகாரிகள் உள்பட 10.-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். வன்முறை தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகின்றது.

Advertisement

Advertisement

முன்னதாக இன்று காங்கிரஸ் தலைவர் சச்சின் சௌத்ரி, கட்சியின் பிரதிநிதிகள் சம்பல் மாவட்டத்துக்குச் சென்றபோது உத்தரப் பிரதேச காவல்துறை தடுத்ததாகக் குற்றம் சாட்டினார். சம்பலில் நடந்த வன்முறை சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்த நிலையில், மக்களவையின் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி சம்பல் மாவட்டத்துக்குச் செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.