ராகுல், இந்தியா கூட்டணி தலைவர்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் 14 பிழைகள்!
ராகுல், இந்தியா கூட்டணி தலைவர்கள் தாக்கல் செய்த மனுவில் 14 பிழைகள் இருந்ததாக உச்சநீதிமன்ற பதிவாளர் அலுவலகம் புகார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இந்தியா கூட்டணி தலைவர்கள் தாக்கல் செய்த மனுவில் 14 பிழைகள் இருந்ததாக உச்சநீதிமன்ற பதிவாளர் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த பணியில் கோடிக்கணக்கில் வாக்காளர் பெயர்கள் நீக்கம், முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் சார்பில், உச்சநீதிமன்றத்தில் மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் தில்லியில் உச்சநீதிமன்றத்தை நோக்கி திங்கள்கிழமை (அக். 12) பேரணியாகச் சென்று மனுத்தாக்கல் செய்தனர்.
Advertisement
Advertisement
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, திரிணமூல் காங்கிரஸ் (மம்தா பிரிவு) எம்.பி. சௌகதா ராய், சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவர் தேஜஸ்வி பிரசாத் யாதவ், தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார் பிரிவு) தலைவர் சுப்ரியா சுலே, சிவசேனை (உத்தவ் பிரிவு) தலைவர் சஞ்சய் ரௌத், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் டி. ராஜா, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.பி. மஹுவா மாஜி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலர் எம்.ஏ. பேபி, ஐயுஎம்எல் தலைவர் இ.டி. முகமது பஷீர் உள்ளிட்டோரின் பெயர்களில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் இந்திய தேர்தல் ஆணையம், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் இதர தேர்தல் ஆணையர்களான சுக் பீர் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோர் எதிர்மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், ராகுல் காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சியினர் தாக்கல் செய்துள்ள மனுவில், 14 பிழைகள் மற்றும் ரூ. 200 கட்டணம் குறைவாக செலுத்தியிருப்பதாகவும் உச்சநீதிமன்ற பதிவாளர் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், குறைகளை நிவர்த்தி செய்தால் மட்டுமே மனு மீது விசாரணை என தகவல் வெளியாகியுள்ளன.
அவற்றில் அங்கீகரிக்கப்பட்ட வழக்குரைஞரின் கைப்பொப்பம் இல்லாமல் இருப்பது, போதிய ஆதார ஆவணங்கள் இல்லாதவை போன்றவற்றையும் உச்சநீதிமன்றப் பதிவாளர் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது. அதுமட்டுமின்றி, ரூ. 220 கட்டணம் குறைவாகச் செலுத்தியுள்ளதையும் உச்சநீதிமன்றப் பதிவாளர் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
அரசியலமைப்பின் 32வது பிரிவின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனுவில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் பிற தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோர் எதிர்த்தரப்பினராகச் சேர்க்கப்பட்டது ஏன்? என்றும் என்றும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. மேலும், மல்லிகார்ஜுன கார்கேவின் தெளிவான அடையாள அட்டையையும் கோரியுள்ளது.
இந்த வழக்கில் இன்று (அக். 13) உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணித் தலைவர்கள் தாக்கல் செய்த மனு இன்றைய விசாரணைப் பட்டியலில் இடம்பெறவில்லை.
The INDIA bloc had approached the Supreme Court seeking an independent audit of electoral roll revisions, safeguards against arbitrary voter deletions and greater transparency in the Election Commission's decision-making.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.