FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பொருளாதாரப் பேரழிவின் விளிம்பில் இந்தியா: அமெரிக்காவில் ராகுல் பேச்சு!

பொருளாதாரப் பேரழிவின் விளிம்பில் இந்தியா உள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்திருப்பது குறித்து...

அமெரிக்காவில் ராகுல் காந்தி - படம் - எக்ஸ்
பகிர்:

பொருளாதாரப் பேரழிவின் விளிம்பில் இந்தியா உள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை (நவ. 17) உரையாற்றினார்.

Advertisement

Advertisement

அப்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:

இந்தியாவில் மிகப்பெரிய வேலையின்மைப் பிரச்னையும், கல்வி அமைப்பில் மிகப்பெரிய சிக்கள்களும் உள்ளன. இதனை ஊடகங்கள் புறக்கணித்தாலும் இதுவே யதார்த்தம். எனவே, பொருளாதாரத்தின் விளிம்பில் இந்தியா இருக்கிறது.

இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கும் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களும், விவசாயமும் சிதைக்கப்பட்டுள்ளன. வலிமையான உற்பத்தித் துறை இல்லாமல் இந்தியாவால் முன்னேற முடியாது.

இந்தியாவில் தனியார் நிறுவனங்களின் முதலீடுகள் குறைந்து வருகிறது. அதேவேளையில், அதானி மற்றும் அம்பானி போன்ற ஒரு சில பெருநிறுவனங்கள் மட்டுமே வளர்ச்சியடைந்து வருகிறது என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.

summary

Rahul Gandhi, Leader of the Opposition in the Lok Sabha, stated that India is on the brink of an economic catastrophe.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.