FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

அரசுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம்: விவசாய சங்கத் தலைவர் கைது!

உ.பி.யில் போராட்டத்தை தீவிரப்படுத்த பாரதிய கிசான் யூனியன்...

4 December 2024, 7:07 pm IST
- PTI
பகிர்:

அரசுக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்துள்ள விவசாய சங்கத்தின் தலைவர் ராகேஷ் டிகாய்ட் சிறைபிடிக்கப்பட்டுள்ளார்.

விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, உத்தரப் பிரதேச மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தில்லியை நோக்கி நூற்றுக்கணக்கான விவசாயிகள் திங்கள்கிழமை பேரணியாக புறப்பட்டனா். பாரதிய கிசான் யூனியன், பாரதிய கிசான் பரிஷத், சம்யுக்த கிசான் மோா்ச்சா, கிசான் மஸ்தூா் மோா்ச்சா அமைப்புகள் சாா்பாக இந்தப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிலையில், தங்கள் போராட்டத்தை புதன்கிழமை தீவிரப்படுத்த பாரதிய கிசான் யூனியன் முடிவு செய்தது. இதனிடையே, கிரேட்டர் நொய்டாவில் விவசாயிகள் சங்க தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் இன்று(டிச. 4) பங்கேற்க சென்ற பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் டிகாய்ட், அலிகார் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவருடன் சேர்த்து விவசாய சங்கப் பிரதிநிதிகள் பலர் கைது செய்யப்பட்டு டப்பால் காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

விவசாயிகளை எத்தனை காலம் சிறைப்பிடித்து வைக்க அரசு நிர்வாகத்தால் இயலும் என்றும் கேள்வி எழுப்பியுள்ள ராகேஷ் டிகாய்ட், இத்தகைய நடவடிக்கைகளை அதிகாரிகள் கையிலெடுத்தால், விவசாயிகளின் போராட்டம் மேலும் தீவிரமடையும் என்றும் எச்சரித்துள்ளார்.

கடந்த 1997-ஆம் ஆண்டுமுதல் உத்தரப் பிரதேசத்தில் தங்களிடம் இருந்து அரசு கையகப்படுத்திய நிலங்களுக்கு போதிய இழப்பீடு வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி,கிரேட்டர் நொய்டாவின் ஸீரோ பாய்ண்ட் பகுதியில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் இன்று(டிச. 4) திரண்டு அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments