FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

அதானி விவகாரத்தில் மௌனம் காப்பது ஏன்? - எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்!

அதானி லஞ்ச விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இன்று நாடாளுமன்ற மக்களவையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Updated On : 5 டிசம்பர் 2024, 11:34 am IST
பகிர்:

அதானி லஞ்ச விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இன்று நாடாளுமன்ற மக்களவையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாட்டில் ‘அதானி கிரீன் எனா்ஜி’ நிறுவனம் விநியோகித்த சூரிய மின்சக்தியை வாங்க பல்வேறு மாநில மின்பகிா்மான நிறுவன அதிகாரிகளுக்கு 265 மில்லியன் டாலா் (சுமாா் ரூ. 2,239 கோடி) லஞ்சம் அளிக்கப்பட்டதாக அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் அதானியை கைது செய்யவும், நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைத்து விசாரணை மேற்கொள்ளவும் எதிர்க்கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.

Advertisement

Advertisement

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இரு அவைகளிலும் இதுதொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபடுவதால், அவை நடவடிக்கைகள் முடங்கியுள்ளன.

இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து போராட்டமும் நடத்தி வருகின்றனர்.

இன்றும் நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்பட இந்தியா கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதானி விவகாரத்தில் பிரதமர் மோடி மௌனம் காப்பது ஏன்? என பதாகைகளுடன் முழக்கமிட்டு வருகின்றனர்.

மேலும், 'மோடியும் அதானியும் ஒன்றுதான்' என்று எழுதப்பட்ட கருப்பு கோட் ஜாக்கெட்டுகள் அணிந்து எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாடாளுமன்ற வளாகத்தைச் சுற்றி எம்.பி.க்கள் பேரணியும் நடத்தினர்.

சமாஜவாதி, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments