முகப்பு
இந்தியா

புயல் சின்னம்: தமிழகம், ஆந்திரத்துக்கு கனமழை எச்சரிக்கை!

வங்கக் உடலில் உருவாகவிருக்கும் புயல் சின்னம் காரணமாக தமிழகம், ஆந்திரத்துக்கு கனமழை எச்சரிக்கை

Updated On : 7 டிசம்பர் 2024, 9:30 am IST
கனமழை எச்சரிக்கை
பகிர்:

வங்கக்கடலில் உருவாகவிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தென்னிந்திய மாநிலங்களில் குறிப்பாக தமிழ்நாடு, ஆந்திர மாநிலங்களில் அடுத்து வரும் நாள்களில் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வங்கக்கடலில் சனிக்கிழமை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், இது, டிச.12-ஆம் தேதிக்கு மேல் தமிழக கடற்கரையை நோக்கி, இலங்கைக்கு அருகே நகரக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 11 மற்றும் 12ஆம் தேதிகளில் மழை பெய்யும் என்றும், டிசம்பர் 12ஆம் தேதி ஆந்திர மாநில கடலோரப் பகுதிகளிலும், ஏமன், ராயலசீமா பகுதிகளிலும் மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.

Advertisement

Advertisement

இந்திய வானிலை ஆய்வு மைய அறிக்கைப்படி, பூமத்திய ரேகையையொட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில், அதாவது அந்தமானுக்கு தெற்கே, வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இது, மேலும் வலுவடைந்து, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் சனிக்கிழமை (டிச.7) காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக உருவாகும். இது மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து, டிச.12 -க்கு மேல் இலங்கை மற்றும் தமிழக கடற்கரையை நோக்கி நகரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதன் காரணமாக,

டிசம்பர் 11ஆம் தேதி - மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்கள், காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

டிசம்பர் 12ஆம் தேதி - செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவாகவுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. அதேவேளை புயலாக உருவாவதற்கு சாதகமான சூழல்கள் தற்போதுவரை இல்லை. இந்த புயல்சின்னத்தால், தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டாவில் டிச.11 முதல் டிச.14 வரை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தனியாா் வானிலை ஆய்வாளா்கள் கணித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.