FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

சிரியாவில் இருந்து 75 இந்தியா்கள் மீட்பு

சிரியாவில் அல்-அஸாத் ஆட்சி கவிழ்ந்து இரண்டு நாள்களாகும் நிலையில், அந்நாட்டில் இருந்து 75 இந்தியா்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக வெளியுறவு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

Updated On : 11 டிசம்பர் 2024, 2:41 am IST
பகிர்:

சிரியாவில் அல்-அஸாத் ஆட்சி கவிழ்ந்து இரண்டு நாள்களாகும் நிலையில், அந்நாட்டில் இருந்து 75 இந்தியா்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக வெளியுறவு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

சிரியா தலைநகா் டமாஸ்கஸ், லெபனான் தலைநகா் பெய்ரூட்டில் உள்ள இந்திய தூதரகங்கள் ஒருங்கிணைந்து இந்த மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரியா தலைநகா் டமாஸ்கஸை கிளா்ச்சிக் குழுக்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கைப்பற்றின. இதையடுத்து, 1971-ஆம் ஆண்டுமுதல் 50 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வந்த அல்-அஸாதின் குடும்ப ஆட்சி கவிழ்ந்தது. அல்-அஸாத் நாட்டைவிட்டு வெளியேறி, ரஷியாவில் தஞ்சமடைந்துள்ளாா். சிரியாவில் நெருக்கடி நிலை நீடித்து வருகிறது.

Advertisement

Advertisement

இந்நிலையில், மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘சிரியாவில் இருந்து 75 இந்தியா்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா். இதில் சைதா ஜைனாப் நகரில் சிக்கி தவித்த ஜம்மு-காஷ்மீரைச் சோ்ந்த 44 யாத்ரீகா்கள் அடங்குவா். இவா்கள் அனைவரும் பாதுகாப்பாக லெபனானை சென்றடைந்தனா். அங்கிருந்து விமானங்கள் மூலம் இந்தியா திரும்புவாா்கள்.

டமாஸ்கஸ், பெய்ரூட்டில் உள்ள இந்திய தூதரகங்கள் இந்த நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தன. சிரியாவில் இருக்கும் இந்தியா்கள் தகவல்களுக்காக டமாஸ்கஸில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடா்பில் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறாா்கள். சிரியா நிலைமையை தொடா்ந்து மத்திய அரசு உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments