FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் லாபம் சற்று உயர்வு!

பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன், ஜூன் வரையான காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் சற்று உயர்ந்துள்ளதாக தெரிவித்தது.

Updated On : 7 ஆகஸ்ட் 2026, 10:40 pm IST
பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட்.
பகிர்:

புதுதில்லி: அரசுக்குச் சொந்தமான பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன், ஜூன் வரையான காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் சற்று உயர்ந்து ரூ. 8,998 கோடியாக இருப்பதாக நிறுவனம் இன்று அறிவித்தது.

இக்காலாண்டில் நிறுவனத்தின் செயல்பாடுகள் மூலம் ஈட்டிய மொத்த வருவாய் ரூ. 28,526.86 கோடியாக இருந்தது.

2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டில், நிறுவனத்தின் வரிக்குப் பிந்தைய நிகர லாபம் ரூ. 8,981 கோடியாக இருந்தது. இதுவே 2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த வரிக்குப் பிந்தைய நிகர லாபம் ரூ. 8,998 கோடியாக இருந்தது. அதே வேளையில், நிறுவனத்தின் ஒருங்கிணைந்த கடன் மதிப்பு ஜூன் 2026ல் ரூ. 11,60,133 கோடியாக இருந்தது.

Advertisement

Advertisement

பங்குதாரர்களுக்கு ஒரு பங்கிற்கு ரூ. 3.90 என்ற இடைக்கால ஈவுத்தொகையை வாரியம் அறிவித்துள்ளதாக பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷனின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பர்மிந்தர் சோப்ரா தெரிவித்துள்ளார்.

summary

State-owned Power Finance Corporation reported a rise in its consolidated net profit.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments