FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ரிசர்வ் வங்கி ஆளுநராகப் பதவியேற்றார் சஞ்சய் மல்ஹோத்ரா!

மத்திய ரிசர்வ் வங்கியின் 26-வது ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா பொறுப்பேற்பு..

Updated On : 11 டிசம்பர் 2024, 12:20 pm IST
பொறுப்பேற்றுக் கொண்ட சஞ்சய் மல்ஹோத்ரா
பகிர்:

மத்திய ரிசர்வ் வங்கியின் 26-வது ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

தற்போது மத்திய வருவாய் துறை செயலராக உள்ள சஞ்சய் மல்ஹோத்ராவை மத்திய ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக மத்திய அரசு நியமித்துள்ளது. இதையடுத்து, இன்று ரிசர்வ் வங்கியின் ஆளுநராக பொறுப்பேற்றார்.

ஆறு வருட காலத்திற்குப் பிறகு செவ்வாய்க்கிழமை பதவியிலிருந்து விலகிய சக்திகாந்த தாஸுக்குப் பதிலாக முன்னாள் வருவாய்ச் செயலர் மல்ஹோத்ரா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அடுத்த 3 ஆண்டுகளுக்கு அப்பதவியை வகிப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

பதவிக்காலம் நிறைவு..

சஞ்சய் மல்ஹோத்ரா, 1990ஆம் ஆண்டு ராஜஸ்தான் பிரிவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ஆவார். தற்போது ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த சக்திகாந்த தாஸ் பதவிக்காலம் டிசம்பர் 10ஆம் தேதி நிறைவு பெறுவதையடுத்து, புதிய ஆளுநர் நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக ஆளுநருக்கான நியமன உத்தரவை மத்திய அரசு குடியரசுத் தலைவருக்கு அனுப்பி ஒப்புதல் பெறவிருந்தது. இதையடுத்து, அவரது நியமனத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையில், மத்திய ரிசர்வ் வங்கியின் 26வது ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா இன்று பதவியேற்றுக் கொண்டார்.

சஞ்சய் மல்ஹோத்ரா கடந்துவந்த பாதை..

சஞ்சய் மல்ஹோத்ரா ஐஐடி-கான்பூரில் கணினி அறிவியலில் பொறியியல் பட்டம் பெற்றவர். பிறகு அமெரிக்காவில் உள்ள பல்கலையில் பொதுக் கொள்கைப் பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

கடந்த 33 ஆண்டு காலத்தில், சஞ்சய் மல்ஹோத்ரா மத்திய அரசின் எரிசக்தி, நிதி, வரித் துறை, தகவல் தொடர்பு மற்றும் சுரங்கத் துறை என பல துறைகளில் பல முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார்.

நிதி மற்றும் வரி விதிப்பில் பல ஆண்டு கால அனுபவம் கொண்டவர் சஞ்சய். நேரடி மற்றும் மறைமுக வரி விதிப்பு முறையின் வரிக் கொள்கைகளை உருவாக்கியதில் சஞ்சய் மல்ஹோத்ராவின் பங்கு மிக முக்கியமாக அமைந்திருந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments