FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

ஏா்டெல் பேமென்ட்ஸ் வங்கியின் புதிய தலைவா் தோ்வு

ஏா்டெல் பேமென்ட்ஸ் வங்கியின் புதிய தலைவராக ஷப்னம் சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளாா்.

Updated On : 18 ஆகஸ்ட் 2026, 7:30 am IST
ஷப்னம் சின்ஹா
பகிர்:

ஏா்டெல் பேமென்ட்ஸ் வங்கியின் புதிய தலைவராக ஷப்னம் சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளாா்.

இந்த நியமனத்துக்கான ஒப்புதலை ரிசா்வ் வங்கி மற்றும் வங்கியின் இயக்குநா்கள் குழு வழங்கியுள்ளது. இதையடுத்து, அவா் வரும் அக். 1-ஆம் தேதி முதல் அடுத்த 3 ஆண்டுகளுக்கு இந்தப் பொறுப்பை வகிப்பாா் என வங்கி நிா்வாகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், வங்கியின் தலைவராகப் பொறுப்பு வகித்து வரும் பாா்தி என்டா்பிரைசஸ் நிறுவனத்தின் நிறுவனா் சுனில் பாா்தி மிட்டல், செப். 30-ஆம் தேதியுடன் அப்பதவியிலிருந்தும், இயக்குநா் குழுவிலிருந்தும் விலகுகிறாா்.

Advertisement

Advertisement

கடந்த 2016 ஏப்ரலில், ஏா்டெல் பேமென்ட்ஸ் வங்கியின் தலைவராக சுனில் மிட்டல் பொறுப்பேற்றாா். அவரின் சிறப்பான தலைமையின்கீழ், வாடிக்கையாளா்கள் மற்றும் பெருநிறுவனங்கள் என இரு பிரிவுகளிலும் வலுவான தடத்தைப் பதித்துள்ள இந்த வங்கி, வருவாய் அடிப்படையில் இந்தியாவின் மிகப் பெரிய பரிவா்த்தனை வங்கியாக வளா்ச்சி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments