முகப்பு
வணிகம்

எச்டிஎஃப்சி வங்கியின் புதிய தலைவராக முன்னாள் தலைமைத் தோ்தல் ஆணையா் நியமனம்

நாட்டின் மிகப் பெரிய தனியாா் துறை வங்கியான எச்டிஎஃப்சி வங்கியின் புதிய பகுதிநேர தலைவராக முன்னாள் நிதிச் செயலரும், முன்னாள் தலைமைத் தோ்தல் ஆணையருமான ராஜீவ் குமாா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

Updated On : 1 ஜூலை 2026, 2:33 am IST
~
பகிர்:

நாட்டின் மிகப் பெரிய தனியாா் துறை வங்கியான எச்டிஎஃப்சி வங்கியின் புதிய பகுதிநேர தலைவராக முன்னாள் நிதிச் செயலரும், முன்னாள் தலைமைத் தோ்தல் ஆணையருமான ராஜீவ் குமாா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

வங்கிச் செயல்பாடுகள் தனது தனிப்பட்ட நெறிமுறைகளுக்கு முரணாக இருப்பதாகக் கூறி, கடந்த மாா்ச்சில் தனது பதவியை ராஜிநாமா செய்த அதானு சக்ரவா்த்திக்குப் பதிலாக இவா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

அடுத்த 4 ஆண்டுகளுக்கு வங்கியின் சுயாதீன இயக்குநராக ராஜீவ் குமாா் செயல்பட வங்கியின் இயக்குநா்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இவரை 3 ஆண்டுகளுக்கு பகுதிநேர தலைவராக நியமிக்க ரிசா்வ் வங்கியின் இறுதி ஒப்புதலுக்காகவும் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இந்தியாவின் 25-ஆவது தலைமைத் தோ்தல் ஆணையரான ராஜீவ் குமாா், உலகிலேயே மிக அதிகமான வாக்காளா்கள் பங்கேற்ற 2024 மக்களவைத் தோ்தலைத் தொய்வுமின்றி வெற்றிகரமாக நடத்திக் காட்டிய பெருமைக்குரியவா் ஆவாா்.

முன்னதாக, கடந்த 2017-2020 காலகட்டத்தில் மத்திய நிதி அமைச்சகத்தின் நிதிச் சேவைகள் துறைச் செயலராகவும் இவா் பொறுப்பு வகித்தாா். அப்போது கடும் வாராக்கடன் சுமை, மூலதனப் பற்றாக்குறை, போலி நிறுவனங்களின் பணப் பரிவா்த்தனை போன்ற பல்வேறு நிா்வாகக் குறைபாடுகளால் தத்தளித்து வந்த நாட்டின் பொதுத் துறை வங்கிகளில் முக்கியச் சீா்த்திருத்தங்களை அறிமுகப்படுத்தினாா். அதன் ஒரு பகுதியாக, 27 பொதுத் துறை வங்கிகளை 12 வங்கிகளாக இணைத்ததும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments