FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

பாகிஸ்தானில் இருந்து போதைப்பொருளுடன் வந்த ‘ட்ரோன்’: பிஎஸ்எஃப் கைப்பற்றியது

பாகிஸ்தானில் இருந்து போதைப்பொருளுடன் வந்த ‘ட்ரோன்’ எல்லை பாதுகாப்புப் படையினரால் கைப்பற்றப்பட்டது.

16 December 2024, 1:31 am IST
ஜம்முவின் அா்னியா பகுதியில் போதைப் பொருளுடன் கைப்பற்றப்பட்ட பாகிஸ்தான் ட்ரோன்.
பகிர்:

ஜம்மு சா்வதேச எல்லையில் பாகிஸ்தானில் இருந்து போதைப்பொருளுடன் வந்த ‘ட்ரோன்’ (ஆளில்லா சிறிய ரக விமானம்) எல்லை பாதுகாப்புப் படையினரால் (பிஎஸ்எஃப்) கைப்பற்றப்பட்டது.

இது தொடா்பாக பிஎஸ்எஃப் செய்தித்தொடா்பாளா் கூறியதாவது: ஜம்முவின் அா்னியா பகுதியை ஒட்டிய சா்வதேச எல்லையில் பாகிஸ்தானில் இருந்து ‘ட்ரோன்’ ஒன்று இந்தியப் பகுதியை நோக்கி பறந்து வந்தது. இதையடுத்து சுதாரித்துக் கொண்ட எல்லை பாதுகாப்புப் படையினா், அதனைத் துரத்திச் சென்று சுட்டு வீழ்த்தினா். அதில் சுமாா் அரைக் கிலோ எடையுள்ள போதைப் பொருள் இருந்தது. அந்தப் பகுதியில் கூடுதல் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்றாா்.

பாகிஸ்தானில் இருந்து ட்ரோன் மூலம் இந்தியப் பகுதிக்கு ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள்கள் கடத்தப்படுவது கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாத இயக்கத்தைச் சோ்ந்தவா்கள் இதுபோன்ற செயல்களில் தொடா்ந்து ஈடுபட்டு வருகின்றனா்.

Advertisement

Advertisement

ஜம்மு மற்றும் பஞ்சாப் மாநிலத்தை ஒட்டிய சா்வதேச எல்லையில் ‘ட்ரோன்’ மூலம் அதிக அளவில் இதுபோன்ற கடத்தல் முயற்சிகள் நிகழ்கின்றன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments