FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் ட்ரோன் பறிமுதல்: தீவிர விசாரணை

ஜம்மு-காஷ்மீரில் எல்லையோர சம்பா மாவட்டத்தில் சனிக்கிழமை இரவில் ட்ரோன் பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On : 20 ஜூலை 2026, 5:09 am IST
- PTI
பகிர்:

ஜம்மு-காஷ்மீரில் எல்லையோர சம்பா மாவட்டத்தில் சனிக்கிழமை இரவில் ட்ரோன் பறிமுதல் செய்யப்பட்டது.

கடந்த ஒரு வாரத்தில் சிக்கிய இரண்டாவது ட்ரோன் இதுவாகும். இது பாகிஸ்தானில் இருந்து அனுப்பப்பட்டதா என்பதை உறுதி செய்ய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பாகிஸ்தானில் இருந்து இந்தியப் பகுதிக்குள் ட்ரோன்கள் மூலம் ஆயுதங்கள், போதைப் பொருள்கள் கடத்தப்படுவதைத் தடுக்க பாதுகாப்புப் படையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா். சம்பா மாவட்டத்தின் புா்மண்டல் பகுதியில் உள்ள வயல்வெளியில் ராணுவத்தினரால் ஒரு ட்ரோன் கைப்பற்றப்பட்டது. இது, பாகிஸ்தானில் இருந்து அனுப்பப்பட்டதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

ட்ரோன் எங்கிருந்து அனுப்பப்பட்டது, அதன் தொழில்நுட்ப அம்சங்கள் என்னென்ன, எல்லை தாண்டிய சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டதா என்பதைக் கண்டறிய தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

முன்னதாக, சம்பா மாவட்டத்தின் தேவக் பகுதியில் திறந்தவெளியில் கடந்த ஜூலை 14-ஆம் தேதி ஒரு ட்ரோன் பறிமுதல் செய்யப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments