ஜம்மு - காஷ்மீரில் பலத்த மழை: திடீர் வெள்ளத்தில் சிக்கி 11பேர் பலி, பலர் மாயம்
ஜம்மு - காஷ்மீரில் பலத்த மழையால், திடீர் வெள்ளத்தில் நிலச்சரிவு....
ஜம்மு - காஷ்மீரில் பலத்த மழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 11 பேர் பலியான நிலையில் பலர் மாயமாகியுள்ளனர்.
ஜம்மு-காஷ்மீரின் எல்லை மாவட்டங்களான பூஞ்ச் மற்றும் ரஜோரியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்த மழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. திடீர் வெள்ளத்தில் சிக்கி 11 பேர் பலியாகினர். மேலும் பலர் மாயமாகியுள்ளனர். இதனைத் தொடர்ந்து பல அமைப்புகள் இணைந்த கூட்டு மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள சூரான்கோட் தாலுகா மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலனோர் இங்குதான் பலியாகியுள்ளனர். தொடர்ந்து பெய்து வரும் மழை மற்றும் சேதமடைந்த சாலைகளுக்கு மத்தியிலும், மாயமானவர்களைக் கண்டறிய மீட்புக் குழுவினர் தீவிரமாகச் செயல்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Advertisement
Advertisement
மாநில அந்தஸ்து கோரி திட்டமிடப்பட்டிருந்த போராட்டத்தில் பங்கேற்பதற்காக தலைநகர் தில்லியில் இருந்த முதல்வர் ஒமர் அப்துல்லா, நிலைமையைக் கருத்தில் கொண்டு, தனது தில்லி பயணத்தைக் பாதியிலேயே முடித்துக் கொண்டு ஜம்மு திரும்புவதாக தெரிவித்துள்ளார்.
துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்காவும் மழை மற்றும் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் நிலவரத்தை ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடி நிவாரணமும் உதவிகளும் வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஜூலை 23 வரை ஜம்மு-காஷ்மீர் முழுவதும் மிதமான முதல் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்த நிலையில், எல்லை மாவட்டமான ரஜோரியில் சனிக்கிழமை மாலை முதல் இடைவிடாத மழை பெய்தது. இரவு முழுவதும் பெய்த பலத்த மழையால் ஆறுகள் மற்றும் ஓடைகள் நிரம்பி வழிந்தன.
ஆறுகள் கரைபுரண்டு ஓடியதால் பல வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. பேருந்து நிலையம் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்ததால், நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
At least eight people were killed and six others went missing as torrential rains triggered landslides and flash floods in the twin border districts of Poonch and Rajouri in Jammu and Kashmir on Sunday, prompting a multi-agency rescue operation.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.