முகப்பு
இந்தியா

மன்மோகன் சிங் உடலுக்கு ராகுல், கார்கே அஞ்சலி!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி செலுத்தியது பற்றி...

Updated On : 27 டிசம்பர் 2024, 7:34 am IST
மன்மோகன் சிங் - PTI
பகிர்:

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அஞ்சலி செலுத்தினர்.

வயதுமூப்பு காரணமாக முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் வியாழக்கிழமை இரவு காலமானார்.

எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து அவரது உடல் நேற்று நள்ளிரவு தில்லியில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், பெங்களூருவில் காங்கிரஸ் கட்சியின் மாநாட்டில் பங்கேற்க சென்றிருந்த மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள், மன்மோகன் சிங் மறைவை தொடர்ந்து அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிட்டு தில்லி திரும்பினர்.

தில்லி விமான நிலையத்துக்கு நள்ளிரவில் வருகைதந்த கார்கே மற்றும் ராகுல் காந்தி, நேரடியாக மன்மோகன் சிங் இல்லத்துக்குச் சென்று அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments