முகப்பு
இந்தியா

தெலங்கானாவில் 20 தெரு நாய்கள் சுட்டுக்கொலை

தெலங்கானாவில் 20 தெரு நாய்கள் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 19 பிப்ரவரி 2024, 6:30 pm IST
பகிர்:

ஹைதராபாத்: தெலங்கானாவில் 20 தெரு நாய்கள் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் மஹபூப்நகர் பகுதியில் உள்ள பொன்னாகால் கிராமத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்தில், அடையாளம் தெரியாத நபர்கள் தெரு நாய்களை துப்பாக்கியால் சுட்டனர். இந்த சம்பவத்தில் 20 நாய்கள் இறந்தும் மேலும் ஐந்து நாய்கள் காயமடைந்தன.

முதற்கட்ட விசாரணையின், காரில் வந்த ஒருவர் இந்த குற்றத்தை செய்தார் என்று சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

பஞ்சாயத்து அதிகாரி ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பிரிவு 429 மற்றும் விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகள் மற்றும் ஆயுதச் சட்டம் ஆகியவற்றின் கீழ் அடைக்கல் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments