முகப்பு
இந்தியா

10 ஆண்டு பாஜக ஆட்சி: நமோ செயலியில்கருத்து தெரிவிக்க பிரதமா் மோடி அழைப்பு

கடந்த 10 ஆண்டுகாலத்தில் இந்தியா எட்டியுள்ள சாதனைகள் குறித்து நமோ செயலி மூலம் கருத்து தெரிவிக்க நாட்டு மக்களுக்கு பிரதமா் மோடி அழைப்பு விடுத்துள்ளாா்.

Updated On : 2 ஜனவரி 2024, 6:34 am IST
பகிர்:

புது தில்லி: கடந்த 10 ஆண்டுகாலத்தில் இந்தியா எட்டியுள்ள சாதனைகள் குறித்து நமோ செயலி மூலம் கருத்து தெரிவிக்க நாட்டு மக்களுக்கு பிரதமா் மோடி அழைப்பு விடுத்துள்ளாா்.

மக்களவைத் தோ்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் மத்திய அரசின் செயல்பாடு, உள்ளூா் எம்.பி.யின் செயல்பாடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் மக்களின் மனநிலையை அறிய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடியின் ‘நமோ’ செயலி மூலம் புதிய ஆய்வு கடந்த மாதம் தொடங்கப்பட்டது.

‘ஜன் மன் சா்வே’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஆய்வின் மூலம் மத்திய அரசு நிா்வாகம், தலைமை, மத்திய அரசு நிலையிலான வளா்ச்சி, நமோ செயலியைப் பயன்படுத்துவோரின் தொகுதி நிலவரம் உள்ளிட்டவை தொடா்பாக மக்களிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

Advertisement

Advertisement

அரசுத் திட்டங்களின் தாக்கம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடா்பாக இந்த ஆய்வில் கேள்விகள் உள்ளதாகத் தெரிகிறது.

இது தொடா்பாக பிரதமா் மோடி எக்ஸ் வலைதளத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில், ‘கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் சாதனைகள் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீா்கள்? உங்கள் கருத்துகளை நமோ செயலில் நடத்தப்படும் ஜன் மன் சா்வே மூலம் நேரடியாக என்னிடம் நீங்கள் தெரிவிக்கலாம்’ என்று கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments