முதுநிலை நீட் தேர்வு தேதி மாற்றம்!
முதுநிலை நீட் தேர்வின்(2024) தேதி மாற்றப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
முதுநிலை நீட் தேர்வின்(2024) தேதி மாற்றப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள், சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி படிப்புகளுக்கும், கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கும் இளநிலை நீட் தோ்வு மூலம் மாணவா் சோ்க்கை நடத்தப்படுகிறது.
அதேபோல், எம்எஸ் மற்றும் எம்டி போன்ற முதுநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்கு, முதுநிலை நீட் தேர்வை எழுதுகின்றனர். இதற்கான தேர்வு வரும் மார்ச் 3 ஆம் தேதி நடைபெறும் என்று முன்னதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், முதுநிலை நீட் தேர்வு 2024 வரும் ஜூலை 7 ஆம் தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
இதையும் படிக்க: 'குஜராத்தில் எல்லாமே போலி': பட்டியலிட்ட ஜெய்ராம் ரமேஷ்!
மேலும், தேர்வு எழுதிய மாணவர்களின் கட் ஆப் குறித்த விவரங்கள் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.